நல்ல தூக்கத்தைப் பெறுவது எப்படி: நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தூக்கம் ஆழமாகவும், எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருந்தால், காலையில் புத்துணர்ச்சியுடன் எழலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அழகுக்கு மட்டுமின்றி மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. இரவில் நல்ல உறக்கம் வராமல், கனவுகள், சிறுநீர், தாகம் போன்றவற்றால் உங்கள் தூக்கம் அடிக்கடி கலைந்தால், இங்கு குறிப்பிட்டுள்ள முறையில் ஸ்பெஷல் வாழைப்பழ தேநீர் தயார் செய்து குடிக்கலாம். நல்ல தூக்கத்துடன், இது உடலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது.


நல்ல தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்?


நல்ல இரவு தூக்கத்தைப் பெற, வாழைப்பழம் மற்றும் இலவங்கப்பட்டையால் செய்யப்பட்ட இந்த டீயை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ளுங்கள். இந்த தேநீர் தயாரிக்க இந்த பொருட்கள் தேவைப்படும்.


- ஒன்றரை கப் தண்ணீர்
- 1 வாழைப்பழம்
- 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை


தேநீர் தயாரிப்பது எப்படி


- வாழைப்பழத்தை கழுவி சுத்தம் செய்து, தோல் உட்பட சிறிய துண்டுகளாக நறுக்கவும்.


- டீ தயாரிக்க இந்த துண்டுகளை பாத்திரத்தில் போடவும்.


- இதில் ஒரு டீஸ்பூன் (சிறிய ஸ்பூன்) இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.


- அடுத்து, இதில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை மிக குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


- வாழைப்பழத் தோல் உரியத் தொடங்கியதும், கேஸ் ஸ்டவ்வை அணைக்கவும்.


- இப்போது இந்த டீயை வடிகட்டி, மெதுவாக குடிக்கவும்.


- இரவு தூங்கும் போது தூக்கம் கலையாமல் இருக்க தூங்குவதற்கு  ஒரு மணி நேரம் முன்பு குடிப்பதால் நல்ல நன்மைகள் கிடைக்கும்.


- ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் இதை செய்யவும். உங்கள் தூக்கம் மற்றும் காலைப்பொழுது  இரண்டும் மகிழ்ச்சியாக இருக்கும். 


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வேம்பு கஷாயம் உதவும்: இன்னும் இதுல இருக்கு எக்கச்சக்க நன்மைகள் 


வாழைப்பழம் தூக்கம் வர உதவுகிறது


- வாழைப்பழத்தில் அமினோ அமிலம், டிரிஃபோட்டான் மற்றும் ஓய்வுக்கான பண்புகள் உள்ளன. அவற்றின் நுகர்வு மூளையில் செரோடோனின் சுரக்க வழிவகுக்கிறது. செரடோனின் நிதானத்தை அளிக்கும் ஹார்மோன் ஆகும். இது மூளையை அமைதிப்படுத்துகிறது, தூக்கத்தை ஊக்குவிக்கிறது. உடலின் செல்களை அமைதிப்படுத்தி, தளர்வு உணர்வைத் தருகிறது.


- வாழைப்பழத்தை உட்கொள்வது உடலில் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. கார்டிசோல் என்பது தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் ஆகும். இது உடல் மற்றும் மூளையில் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். இது மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது.


தூக்கத்திற்கு இலவங்கப்பட்டையின் பயன்பாடு


- இலவங்கப்பட்டை ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. 


- தூக்கமின்மை பிரச்சனையும் அத்தகைய நோய்களில் ஒன்றாகும். 


- ஆகையால் இரவில் சரியாகத் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இலவங்கப்பட்டையால் செய்யப்பட்ட டீயை உட்கொள்ளலாம். 


- இது  நீங்கள் உண்ணும் உணவின் செரிமானத்தை உறுதி செய்கிறது.


- இலவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதைக் கொண்டு வாழைப்பழத்துடன் தேநீர் தயாரிக்கும் போது, ​​தூக்கத்தில் அதன் தாக்கம் தெளிவாகத் தெரியும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இரவு நேர உணவே ஒருவரின் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR