பற்குழி பல் சொத்தையை குணமாக்க மந்திர வழி: பற்கள் குணமாகவில்லை என்றால், அதன் காரணமாக முழு உடலும் அசௌகரியமாக இருக்கும். பல்வலி, குழிவு பிரச்சனையால் எதையும் சரியாகச் சாப்பிட முடியாது. பற்கள் சிதைவதால், வலி ​​பிரச்சனை ஏற்படுகிறது, அதே போல் ஈறுகளும் சேதமையத் தொடங்கியதும் வீக்கம் ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னை அதிகரித்தால், பல் பிடுங்கும் நிலைக்கு வந்துவிடும். எனவே இன்று நாம் சில வீட்டு வைத்தியங்களை உங்களுக்குச் சொல்லப் போகிறோம், இதன் உதவியுடன் நீங்கள் பற்களை குழியிலிருந்து (கேவிட்டி) பாதுகாக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பற்குழியை எவ்வாறு தடுப்பது
பல் வலி தாங்குவது மிகவும் கடினம். குழி பற்களை முற்றிலும் சேதமாக்கிவிடும், இதன் காரணமாக வலியின் பிரச்சனை தொடங்குகிறது. பல் சொத்தையை முன்கூட்டியே நிறுத்தினால், பல்வலி மற்றும் குழி பிரச்சனை எளிதில் நீக்கிவிடும், இல்லையெனில் பல் படுங்கும் நிலைக்கு கூட வழிவகுக்கும். எனவே பற்குழியை அகற்ற சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். அவை என்னவென்று பார்ப்போம்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!


பல் தூள்
பற்கள் ஆரோக்கியமாக இருக்க, வீட்டில் தயாரிக்கப்படும் மூலிகைப் பல் பொடியைப் பயன்படுத்தலாம். இது பல் சொத்தையை நிறுத்துவதோடு, துர்நாற்றம், பையோரியா போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுத்த உதவுகிறது. அதன்படி கிராம்பு, உலர்ந்த வேப்ப இலைகள், அதிமதுரம் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை பற்களுக்கு தூள் தயாரிக்க பயன்படுகிறது. பொடி செய்ய, இவை அனைத்தையும் நைசாக அரைத்து கலந்து, தினமும் டூத் பேஸ்டாக பயன்படுத்தவும்.



தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயால் பல் சொத்தையையும் நீக்கலாம். தேங்காய் எண்ணெயை வாயில் போட்டு வாய் கொப்பளிக்கலாம். இதன் காரணமாக, பற்களில் எண்ணெய் இழுப்பு ஏற்பட்டு, சிதைவு நீங்கும்.


பற்பசையில் (டூத்பேஸ்ட்) கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை
உங்கள் சாதாரண பற்பசையில் இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு கலந்து தினமும் பற்களை சுத்தம் செய்தால், பற்களின் குழி நீக்கப்படும். கிராம்பு எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை பல் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.



முன்கூட்டியே பற்களை சரியான முறையில் பார்த்துக்கொள்ளுங்கள்
சரியான நேரத்தில் பற்குழியை கவனிக்கவில்லை என்றால், அவை சரிசெய்வது கடினமாகிவிடும். எனவே, மேலே வழங்கப்பட்டுள்ள முறைகளை முன்கூட்டியே கடைப்பிடிப்பதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்தைப் பேணலாம். அதேபோல் தினமும் பற்களை நல்ல முறையில் சுத்தம் செய்யுங்கள், பற்களில் சிக்கிய உணவும் பற்குழியை உண்டாக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ