இருமல், சளியை விரட்டும்... சில எளிய வீட்டு வைத்தியங்கள்..!!
குளிர்காலம் வந்துவிட்டது. அதனுடன் நிறைய உடல்நலப் பிரச்சினைகள் அழையாத விருந்தாளியாக வந்து சேரும். அவற்றில் சில சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை அடங்கும்.
குளிர்காலம் வந்துவிட்டது. அதனுடன் நிறைய உடல்நலப் பிரச்சினைகள் அழையாத விருந்தாளியாக வந்து சேரும். அவற்றில் சில சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை அடங்கும். இவற்றுடன், ஒதனால், நீங்கள் தீவிர சோர்வு மற்றும் அன்றாட பணிகளை திறம்பட செய்வதில் சிரமத்தை உணரலாம். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் சளி மற்றும் இருமல் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்க உதவும். இந்த கட்டுரையில், நீங்கள் சில நிவாரணம் பெற உதவும் சில சிறந்த தீர்வுகளை பட்டியலிட்டுள்ளோம்.
சளி மற்றும் இருமல் தீர சில எளிய வீட்டு வைத்தியம்
1. இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு விளைவை வழங்குகிறது. இது இருமலை சமாளிக்க உதவும். இஞ்சியை துருவி சாறெடுத்து தேனுடன் கலக்கவும் அல்லது உங்கள் தேநீரில் இஞ்சியை சேர்த்து பருகவும்.
2. தேன்
இருமலுக்கு தேன் ஒரு சிறந்த தீர்வாகும். இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் நிரம்பியுள்ளது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பயன்படுத்தப்படலாம். ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு சில துளிகள் இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிடுவது இருமல் நீங்கும். நீங்கள் அதை சூடான எலுமிச்சை அல்லது கிரீன் டீயிலும் சேர்க்கலாம்.
மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ
3. வைட்டமின் சி
வைட்டமின் சி ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பருவகால நோய்களின் தாக்குவதை முதலிலேயே தடுக்க உதவும். போதுமான சிட்ரஸ் பழங்களைச் சேர்ப்பது நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவும். இதனால், நோய்கள் அண்டாமல் தடுக்கப்படும். வரும் முன் காப்பது எபோதுமே சிறந்தது அல்லவா.
4. மஞ்சள்
மஞ்சள் குளிர்காலத்தில் கண்டிப்பாக உணவில் இருக்க வேண்டும். இது உங்களை உடலை சூடாக வைத்திருக்கவும், சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
5. உப்பு கலந்த வெதுவெதுபான நீரில் வாய் கொப்பளிக்கவும்
உப்பு கலந்த வெதுவெதுபான நீரில் வாய் கொப்பளிப்பது, சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. இது சுவாச பாதையில் ஏற்படும் தொற்று மற்றும் தொண்டை புண் ஆகியவற்றின் தீவிரத்தை குறைக்கிறது. அதேபோல, நீராவி பிடித்து சுவாசிப்பது சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. இது மூச்சுக்குழாய்களுக்கு ஈரப்பதத்தை வழங்குவதன் மூலம் இருமலை கட்டுப்படுத்த உதவுகிறது.
6. சூப்கள்
சூப்கள் குளிர்ச்சியின் தீவிரத்தை குறைத்து, உடலை விரைவாக நோயிலிருந்து மீட்கும். அவை உங்களை சூடாக வைத்திருக்கும் மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கக்கூடிய ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
7. சூடான பானங்கள்
குளிர்காலத்தில் தேநீர் பொதுவாக உட்கொள்ளப்படுகிறது. உங்கள் குளிர்கால உணவில் சூடாக இருக்க மற்ற சூடான பானங்களையும் சேர்க்கலாம். சூடான பானங்களைப் பருகுவது சுவாச பாதையை சீராக்கி, பாதிப்பை குறைக்கிறது மற்றும் தொண்டை வலியைக் குறைக்கிறது.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது
மேலும் படிக்க | Peanut Harm: எந்த நோய் இருந்தால் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ