பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பர் 7 முதல் 22 வரையிலான காலக்கட்டத்தில் YouGov நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 72 சதவீத பெண்கள் ஆரோக்கியமான உணவுமுறை மாற்றங்களை அழகாக தோற்றமளிக்கும் சருமத்திற்கு பாதாம் சாப்பிடுகின்றனர்.


சருமத்தின் ஆரோக்கியத்துடன் ஊட்டச்சத்து எவ்வாறு நெருக்கமாக தொடர்புடையது என்பதை நாடு முழுவதும் உள்ள பெண்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் உண்ணும் உணவு நமது சருமத்திற்கான பரமாரிப்புகளில் முக்கியமானது, 


ஆரோக்கியமான பளபளப்பான சருமம் மற்றும் தினசரி உணவுக்கான இயற்கையான மாற்று வழிகளில் நுகர்வோரின் விருப்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த கணக்கெடுப்பில் தெளிவாகத் தெரிகிறது.


மேலும் படிக்க | பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா?


ஒட்டுமொத்தமாக, பெரும்பாலான பெண்கள் பாதாம் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட விரும்புகிறார்கள் என்று முடிவுகள் குறிப்பிடுகின்றன.


பெரும்பாலான பெண்கள் வீட்டு உணவுகள், நார்ச்சத்து நிறைந்த பாதாம் போன்ற பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் அழகான சருமத்தை பெறுவதை கண்கூடாக பார்த்தார்கள் என்று ஆய்வு கூறுகிறது.


சிறந்த தோல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஈ தேவை என்பதை இந்தியப் பெண்கள் உணர்ந்திருப்பதால், அவர்களிடையே பாதாம் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது.


மேலும் படிக்க | பாதாம் பருப்பால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகள்!


இதைத்தவிர, 59 சதவீத பெண்கள் தினமும் பாதாம் பருப்பை (Almond) பெரும்பாலும் ஊறவைத்தோ அல்லது பச்சையாகவோ உட்கொள்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது. அதாவது வழக்கமாக உட்கொள்ளும் உணவுப் பொருளாக பாதாம் மாறிவிட்டது.



30-39 வயதுடைய பெண்களின் சருமத்தில் சுருக்கம் குறைந்திருப்பதாகவும், தோல் பளபளப்பாக மாறியிருப்பதாகவும் பெண்கள் கருதுகின்றனர். எனவே சரும பாதுகாப்பு அம்சங்களில் பாதாம் பருப்புக்கு அதிக மதிப்பு கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.  


பாதாம் சாப்பிட்ட பிறகு தோலில் நேர்மறை விளைவுகள் ஏற்பட்டதை பெண்கள் கவனித்துள்ளன. உண்மையில், 6 மாதங்களுக்கும் மேலாக பாதாமை உட்கொள்பவர்கள், சமீபகாலமாக பாதாமை உட்கொள்ளத் தொடங்கியவர்களைக் காட்டிலும், சரும பளபளப்பு மற்றும் இளமையான சருமம் போன்ற நேர்மறையான தாக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.  


கருத்துக் கணிப்பின் முடிவுகள் குறித்து, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமியின் கருத்து இது: ஆரோக்கியமான நொறுக்குத்தீனி உண்பவர்களின் வாழ்க்கை முறை, ஒருவரின் சரும ஆரோக்கியத்தை உயர்த்தும் என்ற கருத்தை வலுவாக ஏற்றுக்கொள்வதாக கணக்கெடுப்பு முடிவுகள் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.


மேலும் படிக்க | சேப்பங்கிழங்கின் இந்த '7' அற்புத நன்மைகள்


”சிறந்த தோல் ஆரோக்கியத்திற்கு இயற்கையான ஆரோக்கியமான தீனியாக பல ஆண்டுகளாக நான் பாதாமை பரிந்துரைக்கிறேன்.பாதாம் ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் E இன் வளமான ஆதாரமாக அறியப்படுகிறது மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்களை வழங்குகின்றன, பாதாம் முகச் சுருக்கங்கள் மற்றும் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது, எனவே, ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்காக பெண்களை தினசரி உணவில் பாதாமை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”.


YouGov இன் அளவு ஆய்வு அழகுக்கும் சிற்றுண்டிக்கும் இடையே உள்ள தொடர்பை மதிப்பிடுவதையும், அழகு நலன்களுக்கான பெண்களின் சிற்றுண்டி முறைகளைப் புரிந்துகொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. டெல்லி, லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர், இந்தூர், கொல்கத்தா, புவனேஷ்வர், மும்பை, அகமதாபாத், புனே, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் 3,959 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.


மேலும் படிக்க | எலுமிச்சை இருந்தால் உடல் எடை ஒரு பிரச்சனையே அல்ல 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR