நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சில முழு தானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் கார்போஹைட்ரேட் மற்றும் சற்று அதிக கலோரிகள் உள்ளன. அதனால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதற்கு பதிலாக, கிளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம் (Weight Loss Tips). ஏனெனில் இவற்றில் அதிக நார் சத்து இருக்கிறது. மாவுச் சத்து குறைவாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க உதவும் சிறுதானியங்கள் ( Millets for Weight Loss)


ராகி


கேழ்வரகு அல்லது ராகி என்பது தென்னிந்தியாவில் விளையும் ஒரு தானிய வகை. ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது.  புரதம் எடை இழக்க தேவையான மிக முக்கிய ஊட்டசத்து. ராகியில் புரதம் அதிக அளவில் இருப்பதோடு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ராகி மாவில் பசையம் இல்லை. ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். ராகியின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு அரிசி, கோதுமையை விட குறைவாக உள்ளது. ராகியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் கஞ்சி ஆகிய வடிவில் எடுத்துக் கொள்ளலாம். 


அமராந்த் மாவு


அமராந்த்  என்னும் தண்டுக்கீரையின் விதையில் தயாரிக்கப்பட்ட மாவு பசையம் இல்லாத மற்றும் புரதம் நிறைந்த மாவு. இருப்பினும், அமராந்தை ஒரு தானியம் என்று அழைப்பது சரியாக இருக்காது என சிலர் கூறுகின்றனர். ஏனெனில் இது ஒரு செடியின் விதைகளை அரைப்பதன் மூலம் பெறப்படுகிறது. எனினும், அமராந்தில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தற்போது, இந்த மாவை பயன்படுத்துவது பிரபலமாகி வருகிறது. இது, கொழுப்பை எரித்து எடையைக் குறைக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Kidney Detox: சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!


தினை மாவு


புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தினை ஒரு பசையம் இல்லாத தானியமாகும். இது நமது ஒட்டுமொத்த பிட்னஸை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உங்கள் வயிற்றுக்கு நீண்ட நேரம் நிறைந்த உணர்வைத் தரும். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறீர்கள். மேலும் புரதம் நிறைந்த இந்த தானியம் உங்கள் கொழுப்பௌ எரித்து, உடல் எடையை வேகமாக குறைக்கிறது. முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும் திறன் கொண்ட திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.  தினை நமது கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.


குயினோவா மாவு


குயினோவா மாவு முற்றிலும் பசையம் இல்லாத இந்த மாவு என்பதோடு, புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். இதில் ஏராளமான நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நமது எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது அதிக அளவிலான கலோரிகளை எரிக்க உதவுகிறது.  இந்த மாவு நம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.  இதனால் பசி குறைகிறது. இதனால் நமது எடை வேகமாக குறைகிறது.


ஓட்ஸ் மாவு


ஓட்ஸ் மாவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்களுக்கு நிறைய கார்போஹைட்ரேட் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் ஆற்றல் நிலை நாள் முழுவதும் அதிகமாக இருக்கும். இது தவிர, அதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக இருப்பதால் நமது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஓட்ஸ் மாவில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் உடல் எடையும் குறையும்.


அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த, மேலே குறிப்பிடப்பட்ட தானியங்கள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், எடை இழக்க  தானியங்களை எடுத்துக் கொள்வது மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு, சரியான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். மேலும், நீங்கள் ஏற்கனவே ஏதேனும் உடல நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.


(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)


 


மேலும் படிக்க | கொத்தமல்லியில் கொத்து கொத்தாய் கொட்டிக்கிடைக்கும் நன்மைகள்.. பல பிரச்சனைகளுக்கு ஒரே வீட்டு வைத்தியம்சார்பில்லாத


சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ