புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளின் பங்கு தலையாயது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில், இதுவரை 79 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அவர்களில், 69 கோடிக்கும் அதிகமானவர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுள்ளனர், 9 கோடிக்கும் அதிகமான மக்கள் கோவாக்சின் போட்டுக் கொண்டுள்ளனர்.


கோவிஷீல்ட் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், கோவேக்சின் தடுப்பூசி இன்னும் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.


கோவாக்ஸின் போட்டுக் கொண்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
கோவாக்ஸின் போட்டுக் கொண்டவர்கள் அனைவரும், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காத வரை, தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், அவர்கள், வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முடியாது என்ற சிக்கலை சந்திக்கின்றனர். எனவே, இந்த அங்கீகாரம் கோவேக்ஸின் போட்டுக் கொண்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.


Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி


WHO நிபுணர் குழு எப்போது கூடும்?
ஜீ நியூஸுக்கு கிடைத்த உலக சுகாதார அமைப்பின் பிரத்யேக ஆவணங்களின்படி, உலக சுகாதார அமைப்பின் கோவிட் தடுப்பூசி நிபுணர் குழு, மூலோபாய ஆலோசனை குழு நிபுணர்கள் குழு (Strategic Advisory Group of Experts (SAGE)) அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை இந்திய நேரப்படி 4:45 மணிக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி குறித்து பரிசீலனை செய்வதற்காக கூடுகின்றனர்.


இந்த கூட்டத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தரப்பில் இருந்து அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். கோவிட் தடுப்பூசி குறித்த உலக சுகாதார அமைப்பின் குழுவினர் கேட்கும் விளக்கஙக்ளை பாரத் பயோடெக் நிறுவனம் கொடுக்கும். உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்த குழு தடுப்பூசி குறித்து பரிசீலிக்க சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.


பாரத் பயோடெக்கால் நடத்தப்பட்ட சோதனைகளின் தரவுகளின் அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பாகவும் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை உலக சுகாதார மையம் பரிசீலிக்கும். அதன் பிறகு உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்து இறுதி முடிவெடுக்கும்.


READ ALSO | ஒற்றை தலைவலியை ஓட விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR