பல வித காய்கறிகளை நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். சில காய்களை பலருக்கு பிடிக்கும். சில காயக்ளை யாருக்கும் பிடிக்காது. அதன்படி பெரும்பாலோருக்கு சுரைக்கா அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நீங்கள் புறக்கணிக்கும் இந்த காய்கறியில் பல நன்மைகள் உள்ளன. ஆம்., இந்த காய்கறியை நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் பலவித நன்மைகளை பெறலாம். எனவே இந்த பச்சை காய்கறியின் 5 பெரிய நன்மைகள் என்ன என்பதை அறிய முயற்சிப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. எடையை குறைக்க உதவும்


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தினமும் சுரைக்காய் சாப்பிட வேண்டும். இது உங்கள் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பல பெரிய நோய்களும் உங்களை விட்டு விலகும். அதாவது இன்றிலிருந்தே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | வாய் பிளக்க வைக்கும் வாழைப்பழ மாஸ்க்: முகம் பளிச் என்று பளபளக்கும் 


2. வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்


எப்பொழுதும் வயிற்றெரிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு வலுவாக இருக்கும், மேலும் நீங்கள் எந்த காய்கறியையும் எளிதில் ஜீரணிக்க முடியும்.


3. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்


மாறிவரும் வாழ்க்கை முறையால் இதயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதாவது கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.


4. சருமத்திற்கு நன்மை பயக்கும்


பளபளப்பான சருமத்தை விரும்பாதவர் யார்? நீங்களும் உங்கள் சருமம் பளபளப்பாக வேண்டுமெனில், இன்றே உங்கள் உணவில் சுரைக்காய்களை சேர்த்துக்கொள்ளுங்கள். வேண்டுமானால் இதன் சாற்றையும் அருந்தலாம்.


5. மன அழுத்தத்தைக் குறைக்கவும்


மன அழுத்தம் என்பது இன்று மற்ற அனைவருக்கும் உள்ளது. அதைக் குறைக்க சிலர் யோகாவும், சிலர் உடற்பயிற்சியும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும், சுரைக்காய் ஒரு காய்கறி என்று சொல்லலாம்.


சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


- வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால், உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படும். அதாவது, வெப்பத்தை எதிர்த்து போராட இது உதவுகிறது.


- சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.


- சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து போன்றது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். 


- சுரைக்காய் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்காது.


- சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நீங்கள் உண்ணும் அனைத்து உணவின் முழுப் பலனையும் உடல் பெறுகிறது.


- சுரைக்காயில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால், உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க இது உதவுகிறது.


- சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.


- கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR