முடி உதிர்வு தவறுகள்: இளம் வயதிலேயே முடி உதிர்வது ஒரு பிரச்சனையாகும். இந்த பிரச்சனை 20 வயதில் ஏற்பட ஆரம்பிக்கும் போது, ​​ உங்களுக்கு மிக சீக்கிரம் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆம், வழுக்கை என்பது உடனே தொடங்கும் பிரச்சனையல்ல. நீண்ட நாட்கள் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும் போது, இது நடக்கிறது. ஆனால் அதன் அறிகுறிகளை நீங்கள் ஏற்கனவே உணரத் தொடங்குவதால், கவனமாக இருந்தால் இதனை தவிர்க்கலாம். சிறு வயதிலேயே முடி உதிர்தல் தொடங்கும் போது, ​​பல வகையான சிரமங்களும் உங்களுக்கு ஏற்படும். மேலும் சந்தையில் விலையுயர்ந்த மருந்துகள், ஷாம்புக்கள் கூட வேலை செய்யாதபோது, ​​பிரச்சனை உங்களுக்கு அதிகரிக்கிறது. எனவே நீங்கள் வழுக்கை ஏற்படாமல் இருக்க  எந்த வகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். கீழ்கண்ட விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் இருந்தால், முடி உதிர்தலை தடுத்து, வழுக்கை ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 வயதில் முடி உதிர்வதற்கு 5 முக்கிய காரணங்கள்


1. ஹார்மோன் மாற்றம்


ஆண்ட்ரோஜன் அளவு போன்ற உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்வதற்குக் காரணம். பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளது, இதன் காரணமாக முடி உதிர்தல் ஏற்படுகிறது. இது தவிர, ஆண்களின் முடி உதிர்தலுக்கு காரணம் ஆண்ட்ரோஜன் அளவில் உள்ள ஏற்றத்தாழ்வு. எனவே இந்த பிரச்சனை இருந்தால், அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.


மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்க.... சூப்பரான ‘5’ காலை உணவு ரெஸிபிகள்!


2 . மன அழுத்தம்
நீங்கள் அதிக மன அழுத்தம் அல்லது பதட்டத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், முடி உதிர்தல் பிரச்சனை உங்களுக்கு இருக்கலாம். மன அழுத்தம் முடி வளர்ச்சியின் செயல்முறையை குறைக்கிறது, இது முடி உடைவதற்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்தால், முடியின் வேர்களும் பலவீனமாகி, வழுக்கைக்கு பலியாகிவிடலாம்.


3. ஊட்டச்சத்து குறைபாடுகள்


கூந்தலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் முடி உதிர்வதுடன், முடியின் வேர்களும் பலவீனமடையும். சரியான சத்துக்கள் முடிக்குள் போகவில்லை என்றால், முடி வலுவிழந்துவிடும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். முடி ஆரோக்கியத்திற்கு சரியான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் தேவை, அவை இல்லாததால் முடி உதிர்தல் ஏற்படலாம்.


4. மரபணு காரணி


சிறு வயதிலேயே  முடி உதிர்தலுக்கான காரணம் மரபணு . இந்த காரணி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரையுமே பாதிக்கிறது. முடி உதிர்வுக்கு மரபணு காரணிதான் மிகப்பெரிய காரணம் என்பதும் பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா என்பது ஒரு சிக்கலான மரபணு தடயமாகும்.  இது முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த விஷயாத்தில் கவனம் தேவை. அலட்சியமாக இருந்து தவறு செய்யாதீர்களும்


5. மருந்துகள்


சிறு வயதிலேயே முடி உதிர்வதற்கு சில மருந்துகளே முக்கிய காரணம். உண்மையில், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கீமோதெரபி மருந்துகளின் பயன்பாடு முடி உதிர்தலுக்கு மிகப்பெரிய காரணம். இது தவிர, ஆட்டோ இம்யூன் கோளாறுகளும் முடி உதிர்தலுக்கு காரணமாகும், ஏனெனில் இதில் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு முடியின் வேர்களை பலவீனப்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் பருமனா? மோருடன் இதை கலந்து குடிங்க... ஓவர் வெயிட் பிரச்சனை 'நோ மோர்'


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ