பாதுகாப்பான தீபாவளி 2022: தீபங்களின் திருவிழாவான தீபாவளி நெருங்கிவிட்டது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகையாகும். தீபத்திருவிழாவில், எங்கும் தீபம் ஏற்றி, மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எப்படியோ இந்த பண்டிகையின் போது மக்கள் பட்டாசு கொளுத்துகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளிக் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் கொண்டாட்டங்களின் போது எழும் பிரச்சனைகளுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உண்டு . அவை தீ, ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் கலோரி நிறைந்த உணவுகள். அதேபோல் தொற்றுநோய் பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.


மேலும் படிக்க | ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்


பட்டாசு வெடிக்கும் போதும் இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
தீபாவளிப் பண்டிகையில் ஆபத்தை உண்டாக்கும். முதல் காரணி நெருப்பு. பண்டிகையின் போது பல்வேறு காரணங்களால் நெருப்பின் மூலம் ஆபத்து ஏற்படலாம். தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஏற்றுவதன் காரணமாக, பட்டாசு வெடித்து கொண்டாடுவதன் காரணமாக அல்லது குழுக்களாக சேர்ந்து கொண்டாடும் காரணத்தால் கவனக்குறைவின் காரணமாக தீ விபத்து ஏற்படலாம்.


* வெளிப்புறங்களில் எப்போதும் பரந்த திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள். 
* குப்பைத்தொட்டி, குப்பைகள் மற்றும் எரியக்கூடிய பிற பொருட்களின் அருகில் நின்று பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். 
* பட்டாசுகளை ஏற்றும்போது உங்களுக்குப் பொருந்தக் கூடிய அளவு பருத்தி ஆடைகளை அணியுங்கள். 
* பட்டாசு வைத்திருக்கும் இடங்களில் அல்லது பட்டாசு அருகில் நடக்கும்போது பாதணிகளை அணியுங்கள். 
* வெடித்து முடித்த பட்டாசுகளை ஒரு வாளி மணலில் அல்லது ஒரு மூலையில் தண்ணீரில் முக்கி எடுத்து அப்புறப்படுத்துங்கள்.


ஆரோக்கியம் மேம்பட
* அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்துடன் இருங்கள். 
* நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கான பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இனிப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்கவும். 
* தீபங்களின் திருவிழாவான தீபாவளி உங்கள் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான பாதையை பிரகாசமாக்கட்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குச்சிக் கிழங்க இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ