ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்

How To Lose Fat In a Week: ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த எளிய வழிகளை பின்பற்றி பாருங்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2022, 01:30 PM IST
  • ஒரே வாரத்தில் உடலில் உள்ளா கொழுப்பைக் குறைப்பது எப்படி?
  • உடற்பயிற்சி அல்லது உடலில் தேவையான செயல்பாடு நல்ல உணவைப் போலவே முக்கியமானது.
  • காலையில் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும் title=

ஒரே வாரத்தில் உடலில் உள்ளா கொழுப்பைக் குறைப்பது எப்படி:  உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் உடலில் கொழுப்பு அதிகரிப்பதும் அதனால் உடல் எடை அதிகரிப்பதும் மக்களுக்கு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. அதிகரிக்கும் எடை சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது. உடல் பருமனால் சிரமப்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். ஆனால், விரைவாக எடையை குறைப்பது சாத்தியம் இல்லை என்றே பலருக்கு தோன்றுகிறது. 

எனினும், சில எளிய வழிகளை பின்பற்றினால், சில நாட்களிலேயே குறிப்பிடத்தக்க வகையில் உடல் எடையை குறைக்க முடியும். ஆம்!! சில உதவிக்குறிப்புகளை பின்பற்றி சில நாட்களிலேயே உடல் எடையை குறைக்கலாம். இந்த வழிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

உடல் பருமனை குறைக்க, காலையில் எழுந்தவுடன் இவற்றை செய்யுங்கள்:

தினசரி 15 நிமிட நடை:

உடற்பயிற்சி அல்லது உடலில் தேவையான செயல்பாடு நல்ல உணவைப் போலவே முக்கியமானது. காலையில் உடற்பயிற்சி செய்வதால், நாள் முழுவதும் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். அதே சமயம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் அதிகப்படியான கலோரிகள் எரிந்து உடல் பருமனை குறைக்கிறது. 

எனவே தினமும் காலையில் 15 நிமிடம் நடப்பது மிக நல்ல விஷயமாகும். நீங்கள் விரும்பினால், தியானம், யோகா அல்லது உங்கள் விருப்பப்படி எந்த ஒரு ஸ்ட்ரெட்சிங் பயிற்சியையும் செய்யலாம். இது உங்களை நால் முழுவதும் அதிக புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே கொழுப்பை குறைக்கும் 3 உடற்பயிற்சி 

உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்

காலையில் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நீர் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. மேலும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. தண்ணீர் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. போதுமான அளவு நீர் அருந்தினால், பசி குறைவாக இருக்கும். மறுபுறம், நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், எலுமிச்சை சாறு அதற்கு உதவும். 

ஊறவைத்த உலர் பழங்கள்:

காலையில் நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தினசரி வழக்கம் நாள் முழுவதும் உங்கள் மனநிலையை பல வழிகளில் பாதிக்கிறது. உங்கள் நாளை நல்ல முறையில் தொடங்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் அதிக அளவு உலர் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஊறவைத்த பாதாம் பருப்புடன் உங்கள் நாளைத் தொடங்கினால், உடல் எடை கணிசமாக குறையும். 

சீரக நீர் 

இந்தியாவில் அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கும் சீரகத்தில் கால்சியம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. தினமும் சீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் கொழுப்பு படியாமல், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். இதை தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன், எடை இழப்புக்கு அந்த ஜீரக தண்ணீரை கொதிக்க வைத்து, தேநீர் போல குடிக்கவும். இதனால் ஏற்படும் விளைவை விரைவில் உணரத் தொடங்குவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அதிகரிக்கும் எடையை அதிரடியாய் குறைக்கணுமா? இப்படி செஞ்சு பாருங்க போதும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News