சிட்ரஸ் பழங்களில் போதுமான அளவு தாதுக்கள் உள்ளன, குறிப்பாக மனிதர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் ஊட்டச்சத்துக்களின் ஒரு முக்கியமான கனிமமான பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது, எலக்ட்ரோலைட் சமநிலை, இதய செயல்பாடு மற்றும் தசை சுருக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிட்ரஸ் பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்குத் தருகிறது. நமது உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கூட்டும் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் அதிக அளவில் கிடைக்கும் குளிர்காலத்தில், சரும ஆரோக்கியம், ஆரோக்கியமான கூந்தல், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து தேவையை பூர்த்தி செய்வது என ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரஞ்சு, எலுமிச்சை உட்பட பல சிட்ரஸ் பழங்களை உண்கிறோம். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் என்ற அமிலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


சிட்ரஸ் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை ஆகும். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் அவை மிகவும் அவசியம். ஆனால், சிட்ரஸ் பழங்களை எப்போது எப்படி சாப்பிட்டால் பிரச்சனை வரும் தெரியுமா? சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள சிறந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு அவற்றை சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும், உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


சிட்ரஸ் பழங்களை உணவுக்குப் பிறகு உட்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் இவை... 


செரிமான பிரச்சனை
சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள், உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். வயிறு காலியாக இல்லாமல், முழுமையாக வயிறு நிரம்பிய நிலையில் இருந்தால், அது செரிமானத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி, மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அஜீரணம், அசிடிடி நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சாது
உணவு உண்டு வயிறு நிறைந்திருக்கும் நிலையில், சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை உங்கள் உடல் தடுக்கலாம். இது முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உயிர் கிடைக்கும் தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிட்ரஸ் பழங்களில் டானின்கள், பாலிபினால்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் போன்ற சில கலவைகள் உள்ளன, அவை ஊட்டச்சத்து உறிஞ்சுதலை சீர்குலைக்கும். ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளான இவை, சரியான நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே உங்களுக்கு பயனளிக்கும்.


இரத்த சர்க்கரை அளவு சீர்குலையும்
வயிறாற உணவு உண்ட உடனேயே சிட்ரஸ் பழங்களை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு, ரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இது ரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்பு அல்லது எதிர்பாராத அளவு குறைவு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.


மேலும் படிக்க | மது அருந்துவதை நிறுத்தினால் வரும் பக்கவிளைவுகள்! இதுக்கு தான் குடிமகன்கள் பயப்படறாங்களோ?


எடை அதிகரிப்பு
அதிகப்படியான சிட்ரஸ் உணவுகளை உட்கொள்வது உடல் எடையைக் கூட்டும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் உள்ளன. அளவுக்கு அதிகமாகவும், உணவுக்குப் பிறகும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், உடல் எடை கூடும்.


இரைப்பை - குடல்  பிரச்சனை
உணவு உண்ட உடனேயே சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது செரிமான பிரச்சனை உள்ள சிலருக்கு இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தும். வாயு, வீக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் எழும்.  வயிறு பாதி காலியாக இருக்கும்போது மட்டுமே சிட்ரஸ் பழங்களை உண்ண வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நெல்லிக்காயின் வாய் பிளக்க வைக்கும் நன்மைகள்: விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ