தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம்?
சிலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சோர்வு போன்ற சிறிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. நிபுணர்களின் படி, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்தினால், இந்த பக்க விளைவுகளை குறைக்கலாம்.
புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயை நாட்டிலிருந்து ஒழிக்க, தடுப்பூசி செயல்முறை நாட்டில் முழு வீச்சுடன் நடந்துகொண்டு இருக்கிறது. இதுவரை, பலருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. சிலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சோர்வு போன்ற சிறிய பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. நிபுணர்களின் படி, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்தினால், இந்த பக்க விளைவுகளை குறைக்கலாம். மற்றும் இவற்றின் மூலம் வைரஸை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தியையும் இவை பலப்படுத்தலாம்.
தடுப்பூசி (Vaccine) செலுத்திய பிறகு கீழ்காணும் உணவுகளை உட்கொள்வது பக்க விளையுகளைக் குறைத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்
1. மஞ்சளை உணவில் சேர்க்கலாம்
மஞ்சள் (Turmeric) ஒரு 'நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. இதை நாம் சமைக்கும் போது வெகுவாக பயன்படுத்துகிறோம். எனினும், மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால், நம் உடலுக்கு உடனடி சக்தி வருவதோடு, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
2. பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள்
நீங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு, அதிகமான பச்சை காய்கறிகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இவற்றால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
3. பூண்டு உட்கொள்வது நன்மை பயக்கும்
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு, உங்களுக்கு பக்க விளைவுகள் இருந்தால், பூண்டை உணவில் சேர்க்கலாம். ஏனெனில் வைட்டமின்-சி, பி 6, செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் பூண்டில் ஏராளமாக உள்ளன. இவை அனைத்தும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. எனவே, உங்கள் உணவில் பூண்டை தவறாமல் சேர்க்க வேண்டும்.
ALSO READ: Good Health: நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த நேரங்களில் சாப்பிடுங்கள்
4. இந்த பழங்களை சாப்பிடுங்கள்
இப்போது கோடை காலம் என்பதால் தர்பூசணி போன்ற நீர்சத்து கொண்ட பழங்களை உட்கொள்வது நல்லது. இது தவிர, பப்பாளி, அன்னாசி, கிவி, ஆரஞ்சு போன்ற வைட்டமின்-சி நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்பாட்டில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.
5. அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, நீங்கள் அதிக அளவில் தண்ணீர் (Water) குடிக்க வேண்டும். பொதுவாகவே அதிக அளவில் நீர் உட்கொள்பவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பு: கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. இதை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இந்த தகவலை செயல்படுத்துவதற்கு முன், மருத்துவரை அணுகவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR