Good Health: நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த நேரங்களில் சாப்பிடுங்கள்

பலர் அலுவலகத்தில் அதிக வேலைக் காரணமாக சில நேரங்களில் வயிற்றின் பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதன் மூலம் பசியைத் தணிக்க முயற்சிக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 22, 2021, 11:48 PM IST
  • உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் உடலுக்குத் தேவையான கலோரிகளைப் பெற வேண்டும்.
  • உங்கள் உடல் எடையை குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமானது.
  • நாம் எந்த நேரத்தில் சாப்புடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
Good Health: நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த நேரங்களில் சாப்பிடுங்கள் title=

Covid Health Tips: இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த நமக்கு நேரம் இல்லை. சில பல நேரங்களில் வேலை தான் கெதி என்று கிடக்கிறோம். அதுமட்டுமில்லாமல் குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், என்ன சாப்புடுகிறோம், எந்த நேரத்தில் சாப்புடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை.

மேலும் காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவதைக் கூட சில சமயம் மறந்து விடுகிறோம். பலர் காலை உணவையே மறந்து விட்டனர் என்று தான் கூற வேண்டும். நூடுல்ஸ், பிஸ்கட் என சாப்பிட்டு அலுவலகத்திற்கு செல்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது நினைவில் கொள்ள வேண்டும்.  

பலர் அலுவலகத்தில் அதிக வேலைக் காரணமாக சில நேரங்களில் வயிற்றின் பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை (Food) சாப்பிடுவதன் மூலம் பசியைத் தணிக்க முயற்சிக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தில் சரியாக சாப்பிடுவதற்கு பதிலாக, நொறுக்கு தீனி தின்பண்டங்களை சாப்பிடுவது மற்றும் நேரம் கடந்து சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம்.

ALSO READ |  Good Lunch: மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை? 

சமீபத்திய ஆய்வின்படி, பிற்பகல் 3 மணி அளவில் யாரெல்லாம் தினந்தோறும் உணவு சாப்பிடுகிறார்களோ, அவர்களின் எடை இழப்பு செயல்முறையும் மெதுவாக இருக்கும். பிற்பகல் 3 மணியளவில் சாப்பிட்டவர்களின் உடல் எடையை (Body Weight) கணிசமாகக் குறைத்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உணர்திறன் குறைவாக இருக்கும். அதனால் உடல் எடையை குறைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பின்னர் உங்கள் உடல் எடை அதிகரித்து கட்டுக்கோப்பு இல்லாமல், சில நோய்கள் வர அபாயம் உள்ளது. உங்கள் உடல் எடையை குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமானது. 

மேலும், உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் உடலுக்குத் தேவையான கலோரிகளைப் பெற வேண்டும். அதாவது தினசரி 50 சதவிகிதம் மதிய உணவில், 15 சதவிகிதம் காலை உணவில், 15 சதவிகிதம் மாலை உணவில், 20 சதவிகிதம் இரவில் கலோரி இருப்பது மிக முக்கியம்.

ALSO READ |  மறந்து கூட இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம் 

அதேபோல தினம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அளிக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடல் சோர்வின்றி இருக்கும். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி அவசியமானது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil  என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News