குழந்தைகளில் காணப்படும் `இந்த` ஒமிக்ரான் அறிகுறிகளை அலட்சியபடுத்த வேண்டாம்..!!
உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோனா தொற்று பரவல் ஓயவில்லை. அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோன தொற்று பரவல் ஓயவில்லை. அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளிடமும் கொரோனா தொற்றுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சில அறிகுறிகள் காணப்படும் நிலையில், குழந்தைகளிடம் நரம்பியல் தொடர்பான அறிகுறிகள் தென்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 44 சதவீத குழந்தைகளிடம், கோவிட் நோய்த் தொற்றின் நரம்பியல் அறிகுறிகள் காணப்பட்டதாகவும் ( Neurological Symptoms of covid infection) , இந்த குழந்தைகளுக்கு மற்ற நோயாளிகளை விட அதிக கவனிப்பு தேவைப்பட்டதாகவும், கூறப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் பீடியாட்ரிக் நியூராலஜி இதழில் (Journal Pediatric Neurology) வெளியிடப்பட்டுள்ளன.
இது Acute Encephalopathy என்று அழைக்கப்படுகிறது. 15 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டது. ஆனால் இதற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில், கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.
ALSO READ | ஒமிக்ரான் தான் கடைசி திரிபு என அலட்சியம் வேண்டாம்: WHO
காய்ச்சலுடன் தலைவலி:
குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்தால், கோவிட் பரிசோதனையை கூடிய விரைவில் செய்ய வேண்டியது அவசியம். கொரோனா பாதித்த நோயாளிகள் தலையின் பின்பகுதியில் வலி இருப்பதாக புகார் கூறுவது தெரிய வந்துள்ளது.
மூக்கு ஒழுகுதல், வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி:
குழந்தைக்கு சளி, வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தாலும், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது கோவிட் நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஆன்லைனில் மருத்துவரை அணுகி விரைவில் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
ALSO READ | ஒமிக்ரான் தான் கடைசி திரிபு என அலட்சியம் வேண்டாம்: WHO
காய்ச்சல் மற்றும் உடல் வலி:
குழந்தைகளிடம் காணப்படும் கோவிட்-19 இன் அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால், கவனமாக இருங்கள். அது கொரோனா தொற்றாக இருக்கலாம். எனவே, சாதாரண காய்ச்சலாகக் கருதி, மருந்துகளை உண்ணக் கூடாது. மருத்துவரை அணுகி அவருடைய பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR