உலகெங்கிலும் ஓமிக்ரான்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவிற்கு முடிவுரை எழுதலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு மக்கள் சிறிது நிம்மதி அடைந்த நிலையில் தற்போது WHO எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்று கருதுவது மிகவும் ஆபத்தானது என்று வலியுறுத்துகிறது. கோவிட்-19 தொடர்பான உலகளாவிய சுகாதார அமைப்பின், தொழில் நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்கோவ் (Maria van Kerkhove), ஓமிக்ரான் கொரோனா வைரஸின் கடைசி மாறுபாடாக இருக்காது என்றும் வரும் நாட்களில் இன்னும் அதிக அளவில் திரிபுகள் உருவாகலாம் என்றும் கூறினார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி, பல்வேறு திரிபுகள் உருவாகி வரும் நிலையில், உலகெங்கிலும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். சமீபத்திய அலையுடன் கோவிட் தொற்று முடிவடையாது. ஓமிக்ரான் துரதிர்ஷ்டவசமாக கடைசி மாறுபாடாக இருக்காது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ALSO READ | கொரோனாவின் இறுதிச்சுற்று! மருத்துவ நிபுணரின் இனிப்பான செய்தி
உலகெங்கிலும் பேரழிவை உருவாக்கியுள்ள தற்போதைய ஓமிக்ரான் மாறுபாட்டிற்குப் பிறகு, தொற்றுநோய் ஐரோப்பாவில் 'முடிவிற்கு' வரக்கூடும் என்று WHO அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளி வந்துள்ளது.
Omicron மாறுபாடு 171 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என WHO கூறியுள்ளது. இந்த மாறுபாடு பெரும்பாலான நாடுகளில் டெல்டாவை விட வேகமாக பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR