Fatty Liver: சர்க்கரை அதிகம் சாப்பிடுகிறீர்களா; இந்த செய்தி உங்களுக்குத் தான்
Sugar and Liver Health: தற்போது, பிஸியான வாழ்க்கை முறையால், நம் உடல் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று கல்லீரலில் கொழுப்பு சேர்வது.
தற்போது, பிஸியான வாழ்க்கை முறையால், நம் உடல் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று கல்லீரலில் கொழுப்பு சேர்வது. கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை குறிப்பாக அதிக கொழுப்பு உணவுகளை உண்பவர்களுக்கும், ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கிறது.
கல்லீரல் உயிரணுக்களில் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எதிர்காலத்தில், இது பல வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதோடு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். அதிகமாக இனிப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்தாலும், அது எந்த வகையில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவிதில்லை.
அதிக சர்க்கரை உட்கொள்வது கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு அதிக சர்க்கரையை உட்கொள்வது குறித்து ஆய்வு செய்தது. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலுக்கும், கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கும் இடையே தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக சர்க்கரையை சாப்பிடுவது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் குறைந்த அளவிலேயே சர்க்கரையை உட்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
மேலும், அதிக சர்க்கரை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வதன் மூலம், உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது, இதன் காரணமாக உடலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. எனவே, சர்க்கரையை உட்கொள்வது உடலில் இயல்பை விட வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
அதிக சர்க்கரை சாப்பிடுவதன் மூலம் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் ஆளாகலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒரே நேரத்தில் அதிக சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம்.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களில் உள்ள சர்க்கரையை உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதோடு அதிக சர்க்கரை சாப்பிடுவது எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது, இது பல்வேறு நோய்களுக்கான ஆதாரமாக அமைந்து விடுகிறது. சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, சர்க்கரையை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது மிகவும் அவசியம்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR