மாதவிடாய் தாமதமாக வருவது, அல்லது மாதவிடாயின் போது கடுமையான வயிற்று வலி ஏற்படுவது  என்பது இப்போதெல்லாம் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு நமது தவறான வாழ்க்கைமுறையும் ஒரு முக்கிய காரணம். மாதவிடாய் தாமதத்தால் பல நேரங்களில் டென்ஷன் ஏற்பட்டாலும், அதற்கான காரணத்தை அறிய முயலுவதில்லை.  சில நேரங்களில் மருத்துவரிடம் செல்ல கூட தயங்குகிறோம். ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து கூறிய, மகப்பேறு மருத்துவர் டாக்டர் அர்ச்சனா ஜாவிடம் பேசுகையில், கர்ப்பத்தை எதிர்பார்க்காத பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணம் என்ன  என்பது குறித்து தெரிவித்தார்.


மருத்துவர் அர்ச்சனா இது குறித்து மேலும் கூறுகையில், தைராய்டு காரணமாகவும் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. தைராய்டு உங்கள் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குறைந்த அல்லது அதிக தைராய்டு ஹார்மோன் காரணமாக, உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கலாம் என்றார். மேலும், PCOS அல்லது PCOD கூட காரணமாக இருக்கலாம் என்கிறார்  மருத்துவர் அர்ச்சனா ஜா.


மேலும் படிக்க | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


மாதவிடாய் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்று பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோயாக இருக்கலாம். உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருந்தால் மருத்துவரை அணுகவும். சரியான நேரத்தில் சிகிச்சயை பெறுவதன் மூலம் எந்தவொரு சிக்கலையும் தடுக்க முடியும் என்பதால் மருத்துவ ஆலோசனை அவசியம். மறுபுறம், நீங்கள் எந்த ஆலோசனையும் இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொண்டால், அது உங்கள் உடலின் ஹார்மோன்கள் சுரத்தலை அதிகரிக்கவோ குறைக்கவே செய்யலாம்.


அதிக டென்ஷன் காரணமாக ஏற்படும் பாதிப்பு


மன அழுத்தம் காரணமாக சில நேரங்களில் மாதவிடாய் தாமதமாகிறது என்று மருத்துவர் கூறினார். நமது மன நிலை இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் மன உளைச்சல் அல்லது மன அழுத்தத்தின் காரணமாக சுழற்சி வெகு சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரும். இது தவிர, உங்களுக்கு காசநோய் அல்லது நீண்ட கால நோயிலிருந்து மீண்டிருந்தாலும், உங்கள் சுழற்சியில் சிக்கல் இருக்கலாம்.


மாதவிடாய் வலி


மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுவது சகஜம்தான் என்கிறார் மருத்துவர் அர்ச்சனா. சிலருக்கு மாதவிடாய் தொடங்கும் முன் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களில் விலகி விடும். அந்த விஷயத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வலி தாங்க முடியாததாக இருந்தால், வலி ​​நிவாரணிகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகும் வலி தொடர்ந்தால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR