இன்றைய பதட்டமான வாழ்க்கை, கால ஓட்டம், பிஸியான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் மக்கள் அடிக்கடி டென்ஷன் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதை போக்க, வலி ​​நிவாரணிகளை பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய மருந்துகளை உட்கொள்வதன் மூலம் அவர்கள் உடனடி பலனைப் பெற்றாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இவை மிகவும் ஆபத்தானவை. 


வலி நிவாரணி மருந்துகள் மருத்துவ மொழியில் அனால்ஜசிக் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இவை கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றின் நீண்ட கால பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகலாம். 


வலி நிவாரணி பழக்கம் கொடியது


டைகிளோஃபினாக் (Diclofenac) என்ற பொதுவான மருந்தைப் பயன்படுத்துவதால், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இது குறித்த ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பிஎம்ஜி-வில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், பாராசிட்டமால் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ தடுப்பு மருந்துகளுடன் டிக்ளோஃபெனாக் பயன்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை வேகமாக கரைக்கும் ‘மேஜிக்’ட்ரிங்க்!


'வலி நிவாரணி மருந்துகளின் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை செய்தி இருக்க வேண்டும்’


டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் யுனிவர்சிட்டி மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், டிக்ளோஃபெனாக் பொது விற்பனைக்குக் கிடைக்கக் கூடாது என்றும், அப்படி இவை விற்கப்பட்டால், அதன் பாக்கெட்டின் முன்பகுதியில், அதன் சாத்தியமான அபாயங்கள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 


Diclofenac என்றால் என்ன?


டைக்லோஃபெனாக் என்பது ஒரு பாரம்பரிய ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து ஆகும். இது வலி மற்றும் வீக்க சிகிச்சைக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. டைளோஃபெனாக் பயன்படுத்தும் நபர்களுக்கு இருதய நோய் அபாயம் ஏற்படுவதை  மற்ற NSAID மருந்துகள் மற்றும் பாராசிட்டமால் பயன்படுத்துபவர்களுடன் இந்த ஆராய்ச்சி ஒப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | பாலை எப்படி குடிக்க வேண்டும்? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR