பாலை எப்படி குடிக்க வேண்டும்? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

பால் அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. இருந்தாலும் அதை முறையாக குடிப்பதில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 24, 2022, 05:32 PM IST
  • பால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.
  • சரியான முறையில் பால் குடிப்பது முக்கியம்.
  • இல்லையெனில் பல விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
பாலை எப்படி குடிக்க வேண்டும்? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? title=

பால் நமது உடலுக்கு மிக ஆரோக்கியமான பானமாகும். அனைவரும் கண்டிப்பாக தினமும் ஒரு கிளாஸ் பாலாவது குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், பாலை குடிக்க சரியான முறை என்ன? இது குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் இருப்பதுண்டு.

பாலை நின்று குடிப்பதா, அல்லது உட்கார்ந்துதான் குடிக்க வேண்டுமா? என்ற சந்தேகம் மக்களுக்கு வருவதுண்டு. எந்த நிலையில் பாலை குடிக்க வேண்டும்? பாலை குறிப்பிட்ட நிலையில் குடித்தால் அது உடலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இப்படிப்பட்ட கேள்விகளின் விடைகளை இந்த பதிவில் காணலாம்.

பால் ஏன் குடிக்க வேண்டும்?

- பால் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன, இதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.

- பாலில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

- பாலில் உள்ள வைட்டமின் டி இயற்கைக்கு மாறான செல் வளர்ச்சியைத் தடுக்கிறது, இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.

- பால் குடிப்பதால், மகிழ்ச்சியுடன் தொடர்புடைய செரோடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படுகிறது. இது பதற்றத்தை குறைக்கிறது.

- பால் குடிப்பதால், உடலுக்கு இயறையான கொழுப்பு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்காது.

மேலும் படிக்க | பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்? அறிவியல் பின்னணி 

பாலை எப்படி குடிக்க வேண்டும்?

பாலை உட்கார்ந்து குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அமர்ந்த நிலை ஒரு ஸ்பீட் பிரேக்கராக செயல்படுகிறது. ஆகையால், இப்படி செய்யும்போது, பால் உடலின் பல இடங்களில் மிக மெதுவாக பரவுகிறது. 

மாறாக நின்றுகொண்டு பால் குடிக்கும்போது, பாலுக்கு தேவையான நேரடி பாதை கிடைக்கிறது. இதன் காரணமாக அது எளிதில் உறிஞ்சப்பட்டு உடலின் அனைத்து பாகங்களும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.

உட்கார்ந்து பால் குடித்தால் என்ன நடக்கும்?

உட்கார்ந்து பால் குடிக்கும் போது, ​​இந்த திரவத்தின் ஓட்டம் தடைப்பட்டு, உணவுக்குழாயின் கீழ் பகுதியில் தங்கிவிடும். நீண்ட காலத்துக்கு இப்படி நடந்தால், Gastroesophageal Reflux Syndrome போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக GERD என்று அழைக்கப்படுகிறது.

உட்கார்ந்து பால் குடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் என்ன செய்ய?

உட்கார்ந்து பால் குடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், பாலை அவசர அவசரமாக குடிப்பதை தவிர்க்கவும். உங்கள் வயிற்றில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க சிறிது சிறிதாக குடிக்கவும். இப்படி செய்தால், வயிற்றுவலி வராது.

மேலும் படிக்க | மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் : விஞ்ஞானிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News