Health Alert: ‘இந்த’ உடல் நல பிரச்சனை இருந்தால் பாசி பயறுக்கு NO சொல்லவும்
பாசி பயறு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் பாசி பயிறு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாசி பயறு ஆரோக்கிய நலன்கள் நிறைந்தது. புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. உடலுக்கு பெரிதும் நன்மை பயக்கும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாமிரம், ஃபோலேட், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை பாசிப்பயறில் நிறைந்து காணப்படுகின்றன, இதை உட்கொள்வது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாசி பயறு அல்லது பாசி பருப்பு சாப்பிடுவது சிலருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், எந்தெந்த நபர்கள் பாசி பருப்பை உட்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம்.
கீழ்கண்ட உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் பாசி பயறு அல்லது பாசிப் பருப்பை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கல்
சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், பாசிப் பயறை தவிர்க்க வேண்டும். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பாசி பருப்பில், அதிக புரதம் மற்றும் ஆக்சலேட் உள்ளதால், சிறுநீரக கல் இருப்பவர்கள் அதிகளவு பாசி பருப்பை உட்கொள்வது மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
குறைந்த இரத்த சர்க்கரை அளவு
இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால், பாசிப் பருப்பை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இரத்த சர்க்கரையை குறைக்கும் கனிமங்கள் இதில் இருப்பதால், குறைவான இரத்த சர்க்கரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால், சர்க்கரை அளவு மேலும் குறைந்து ஆபத்தை ஏற்படுத்தலாம்.
குறைந்த இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பாசிப் பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், ரத்த அழுத்தம் மேலும் குறைந்து உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக யூரிக் அமிலம்
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, பாசிப் பருப்பை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் புரதம் அதிகம் இருப்பதால், உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். எனவே, அதிக யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், பாசிப் பருப்பை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ