எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்
Health Benefits of Ajwain: இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
Health Benefits of Ajwain: குளிர்காலம் வந்தாலே, சளி, இருமல், தொண்டை வலி, வைரஸ் தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். வெப்பநிலை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் பல வித நோய்கள் நம்மை எளிதாக ஆட்கொள்கின்றன. இப்படிப்பட்ட நேரங்களில் பல இயற்கையான வழிகளில் நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம். அதில் ஒரு வழி பற்றி இங்கே காணலாம்.
இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும். குளிர்கால பிரச்சனைகளுக்கு இது ஒரு சஞ்சீவியாக விளங்குகிறது.
ஓமம் உஷ்னத் தன்மை கொண்டது. இது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஓமம் உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல், செரிமானம், எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் ஓமத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திகு கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
- தொண்டை பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்
தொண்டை புண் (Throat Pain) அல்லது வீக்கம் இருந்தால், ஓமம் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஓமத்தை வாயில் போட்டு அதன் சாற்றை உறிஞ்சினால் தொண்டை பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தொண்டை வீக்கத்தைக் குறைக்க உதவி பல வித தொற்றுநோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஜலதோஷத்தின் போது தொண்டை பிரச்சனைகளை விரைவாக குணப்படுத்த ஓமம் ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகின்றது.
- சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம்
குளிர் காலத்தில் சளி, இருமல் (Cough, Cold) போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். இது போன்ற நேரங்களில் ஓமம் சாப்பிடுவது உடலுக்கு நிவாரணம் அளிக்கும். தேநீரில் ஓமம் சேர்த்து குடித்தால் அல்லது மென்று சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இது தவிர, ஓமம் உட்கொள்வதால் உடலின் உள்ளே இருந்து வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது குளிர்ந்த காலநிலையில் உடலை சூடாக வைத்திருக்கும், குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
மேலும் படிக்க | ஆசிட்டிட்டி பாடாய் படுத்துகிறதா... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...
- செரிமானத்தை மேம்படுத்த உதவும்
குளிர்காலத்தில், செரிமானம் (Digestion) சீராக இருப்பதில்லை. இது வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஓமம் இந்த பிரச்சனைகளை சமாளிக்க ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இது வயிற்றில் உள்ள வாயுவை குறைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் அதிகரிக்கும் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஓமத்தை உட்கொள்வது உதவியாக இருக்கும்.
- எடை இழப்பு
குளிர்காலத்தில் எடை வேகமாக அதிகரிக்கின்றது. ஓமம் எடையை குறைக்க (Weight Loss) உதவும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடல் கொழுப்பை எரிக்கிறது. உடல் பருமனால் பாதிக்கப்ப்பட்டுள்ளவர்கள் ஓமத்தை உட்கொள்வது எடை இழப்பை செயல்முறையை விரைவுபடுத்த உதவும். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் ஓமத்தை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
குளிர்காலத்தில் நோய்த்தொற்றின் ஆபத்து அதிகரிக்கிறது. ஓமம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்த உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது. ஓமம் சளி, இருமல் மற்றும் பிற தொற்றுநோய்களைத் தடுக்கிறது.
(இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Dementia என்னும் மறதி நோய்... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ