ஆசிட்டிட்டி பாடாய் படுத்துகிறதா... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...

Home Remedies For Acidity: தவறான உணவு முறை, மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவை காரணமாக ஆசிடிட்டி பிரச்சனை பலருக்கு உள்ளது. இதனை சாதாரண பிரச்சனை தானே என ஒதுக்கி விட முடியாது ஒதுக்கி விட முடியாது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 27, 2024, 05:21 PM IST
  • ஆசிடிட்டி, வாயு தொல்லையிலிருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள்.
  • அகத்தை சீராக்கும் சீரகம், வளர்சிதை மாற்றத்தை தூண்டி செரிமானம் நன்றாக நடக்க உதவுகிறது.
  • வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதைப் வழக்கப்படுத்திக் கொள்வதும் பலன் அளிக்கும்.
ஆசிட்டிட்டி பாடாய் படுத்துகிறதா... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்... title=

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ஆசிடிட்டிம், வாயுத் தொல்லை போன்ற பிர்ச்சனைகள் பலருக்கு உள்ளது. இதனை சாதாரண பிரச்சனை தானே என ஒதுக்கி விட முடியாது. சில சமயங்களில், நாம் நிம்மதியாக இருக்க முடியாமல், நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு பிரச்சனை அதிகரிக்கும். அதோடு, செரிமான பிரச்சனை 100க்கும் மேற்பட்ட நோய்களை உண்டாக்கும். சிலருக்கு இதனால் வயிற்றில் வலி, நெஞ்செரிச்சல், வயிறு வீக்கம், வயிற்று உப்பிசம், ஏப்பம் என மாறி மாறி ஏதோ ஒன்று படுத்தி எடுத்துக் கொண்டே இருக்கும். 

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, அவை செரிமானத்தை பாதித்து, ஆரோக்கியத்திற்கு (Health Tips) கடுமையான தீங்கு விளைவிக்கும். இதை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது வயிற்றில் வாயுவை உண்டாக்கும். வாயுத் தொல்லையை போக்க உங்கள் சமையலறையில் அன்றாடம் உபயோகப்படுத்தும் சில பொருட்களை உபயோகித்தால் போதும். ஆசிடிட்டி வாயுத் தொல்லை காணாமல் போகும். 

ஆசிடிட்டி, வாயு தொல்லையிலிருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள்

தனியா நீர்

தனியா என்னும் கொத்துமல்லி விதை நீரை குடிப்பதால் ஆசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். இது வாயு மற்றும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொத்தமல்லி, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இந்த நீர் உடலை ஹைட்ரேட் செய்து வயிற்றில் உள்ள சூட்டை தணிக்கிறது.

ஓமம் நீர்

ஓமம் விதைகள் தைமோல் என்ற ஜீரணத்திற்கு உதவவும் நொதியை தூண்டுகிறது. இதனால் ஆசிட்டிட்டி வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் 1/2 டீ ஸ்பூன் ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சாப்பிட்ட பின் தினமும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்.... ஆனால் பக்க விளைவுகளும் உண்டு

சீரக நீர்

அகத்தை சீராக்கும் சீரகம், வலர்சிதை மாற்றத்தை தூண்டி செரிமானம் நன்றாக நடக்க உதவுகிறது. சீரகத்தை தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, இந்த நீரை வடிகட்டி அதனை சாப்பிட்ட பின் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆசிடிட்டி, வாயுத் தொல்லை விரைவில் நீங்கி விடும்.

பெருஞ்சீரகம் என்னும் சோம்பு

பெருஞ்சீரகம் என்னும் சோம்பு நீர் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்கும் ஒரு சஞ்சீவியாக இருக்கும். பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து. ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்த பிறகு, அதனை வடிக்கட்டி குடிக்கலாம்

வெதுவெதுப்பான நீர்

அடிக்கடி ஆசிட்டிட்டி, வாயு பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதைப் வழக்கப்படுத்திக் கொள்வதும் பலன் அளிக்கும். வெந்நீர் குடிப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. செரிமானம் சிறப்பாக இருந்தாலே ஆசிடிட்டி தொல்லை ஏற்படாது.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய அற்புதமான காய்கறி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News