Health Tips: நமது சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் சமையலின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. உணவின் சுவையையும், நறுமணத்தையும், குணத்தையும் மேன்படுத்துவதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. பல வகையான மசாலாக்களால் உருவாக்கப்படும் பண்டங்கள் நம் பசித்த வயிற்றுக்கு விருந்தாகின்றன. நாம் பயன்படுத்தும் மசாலாக்களில் சீரகமும் ஒன்றாகும். உணவின் சுவையை அதிகரிப்பதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Cumin Seeds)


சீரகத்தின் பெயரிலெயே அதன் குணம் வெளிபப்டுகின்றது. சீரகம் என்றால் 'சீர்-அகம்' என்று பொருள். அகமாகிய நம் உடலை சீர்செய்யும் பணியை அது செய்கிறது. சீரகம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய உணவிலும் சேர்க்கப்படும் ஒரு மசாலா ஆகும். ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் சீரகத்தை உட்கொள்வதன் நன்மைகளை பற்றி காணலாம். இரும்புச்சத்து, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், ஜிங்க் மற்றும் மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சீரகத்தில் நிறைந்துள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் தசை வலி மற்றும் உடல் வீக்கம் நீங்கும். இது மட்டுமின்றி, உடல் எடையை குறைத்து, உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் இது உதவுகிறது.


சீரகத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை 


சருமத்தை பளபளக்கச் செய்யும்


சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, இது உங்கள் சருமத்தை அனைத்து வகையான தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்தை (Skin Care) ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.


செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்


செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தினமும் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்ள வேண்டும். இது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் (Constipation) தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் சீரகம் உதவுகிறது.


மேலும் படிக்க | இந்திய டெக்னிக்கை காப்பியடித்து அழகாகும் கொரிய பெண்கள்! அழகு பூக்கும் பூவரச மரம்


கொலஸ்ட்ராலை நீக்க உதவும்


உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால், சீரகத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால், உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, உடல் எடையைக் குறைப்பது (Weight Loss) எளிதாகிறது.


உடல் எடையை குறைக்க


இரவில் தூங்கும் முன், இரண்டு ஸ்பூன் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக நீரை கொதிக்க வைக்காமல் அப்படியே குடிக்கவும். இதற்குப் பிறகு, மீதமுள்ள சீரகத்தை மென்று சாப்பிடவும். இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.


தொப்பையை குறைக்க


உங்கள் தொப்பையை குறைக்க சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. இது பசியைக் குறைத்து, நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நீர் தேக்கத்தையும் குறைக்கிறது. இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைத்து எடையை குறைக்க சீரகம் அருமருந்தாக உதவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொத்தமல்லி: சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை.. பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ