இந்திய டெக்னிக்கை காப்பியடித்து அழகாகும் கொரிய பெண்கள்! அழகு பூக்கும் பூவரச மரம்

Skincare Facts Of Puvarasa Maran:  இளநீரைப் போலவே பல்வேறு மருத்துவ ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பூவரசம் சாறு, சரும பராமரிப்புக்கு அற்புதமான மருந்தாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 14, 2023, 11:38 AM IST
  • இளநீருடன் போட்டி போடும் பூவரசம் சாறு
  • ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஜூஸ்]
  • சரும பராமரிப்பிலி பூவரசம் மரம்
இந்திய டெக்னிக்கை காப்பியடித்து அழகாகும் கொரிய பெண்கள்! அழகு பூக்கும் பூவரச மரம் title=

பூவரசு என்றால், பூவுக்கெல்லாம் அரசன் என்று பெயர். மரமாக இருந்தாலும் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருக்கும் மரமான பூவரசு என்று அழைக்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய சிறப்பு வாயந்தது. ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்து, கரியமில வாயுவை உறிஞ்சி மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான பங்களிப்பைக் கொடுக்கும் பூவரசு மரம் எல்லா இடங்களிலும் காணப்பட்டடலும், அதன் மருத்துவ மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை.

பூவரசு மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவக்குணம் நிறைந்தவை. பூவரசம் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என தனது உடலின் பாகங்கள் அனைத்திலும் மருத்துவ குணங்களை நிரப்பி வைத்திருக்கும் பூவரச மரம், வேப்பமரத்துக்கு நிகரான மரம் என்று சொன்னால் தவறில்லை.  

இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த பூவரசு இலை சரும நோய்களுக்கு அருமருந்து. சர்க்கரை நோய், சரும பராமரிப்பு மற்றும் அழகுப் பொருட்களில் இந்த இலைகள் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் சிறப்பை புரியவைக்கும். 

மேலும் படிக்க | நீரிழிவு நோயை வெல்லணுமா? இந்த டயட் ஃபார்முலாவை பின்பற்றினால் போதும்... ஜெயிச்சிடலாம்!!

சொரியாசிஸ் நோய் உட்பட பல நோய்களுக்கு பூவரசம் மரம் பலனளிப்பதாக ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களுக்கு மருந்தாகிறது பூவரசம்பட்டை. தோலில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கும் ஆற்றல் படைத்தது பூவரசம் மலர். அல்சைமர் எனும் நினைவாற்றல் குறைபாடு நோய்க்கும் சிறந்த மருந்தாக சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெருமையைக் கொண்டது பூவரசு. 

இந்தியாவில் இப்படி என்றால், சர்வதேச அளவிலும் பூவரசம் மரத்தின் பல பாகங்களும் மருத்துவ பயன்பாடுகளுக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Birch Juice

கொரியாவில் பூவரசம் மரத்தின் இலையில் இருந்து எடுக்கும் சாறு சரும பராமரிப்புக்கு பயன்படுகிறது. இளநீரைப் போலவே பல்வேறு மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது பூவரசம் சாறு என்று கொரிய மருத்துவர்கள் நம்புகின்றனர். பூவரசம் இலைகளில் உள்ள தாதுக்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சரும அழகை பராமரிக்க உதவுகிறது.

சருமத்தை பளபளக்கச் செய்வதுடன் நோய்களை அண்டாமல் அடைகாக்கிறது பூவரசம் ஜூஸ். பூவரசம் இலை ஜூஸில் வைட்டமின் பி 3 அதிகம் உள்ளது, இது நியாசினமைடு (Niacinamide) என்று பிரபலமாக அறியப்படுகிறது, பொலிவிழந்த சருமத்தை பிரகாசமாக்கவும், செல் வளர்ச்சியை தூண்டுகிறது. 

பூவரம் மரத்தின் இலைகள் வயதாகும் உடலின் தன்மையை சற்று மந்தப்படுத்துவதால், நீண்டகாலம் இளமையாக இருக்கலாம். சருமத்தை இளமையாக வைக்கும் தன்மையைக் கொண்ட பூவரசம் சாற்றின் நன்மைகள் அதிகம் என்றாலும், அளவுக்கு மேல் அதிகமாக அருந்தக்கூடாது. வெளிப்புற பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம். பூவரசம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், தோல் பரமாரிப்பு பொருட்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.  

மேலும் படிக்க | உடல் பருமன் பாடாய் படுத்துதா? இந்த டிப்ஸ் மூலம் சில நாட்களில் எடையை குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News