சீரக தண்ணீர்: ஆஸ்துமா முதல் செரிமானம் வரை... மிகச்சிறந்த வீட்டு வைத்தியம்
Health Tips:சீரகம் நமது உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்கிறது. ஆனால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பல அம்சங்கள் இந்தச் சிறிய விதைக்கு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
Health Tips: சீரகம் ஒரு பழமையான விதை மற்றும் மசாலா ஆகும். இந்தியாவில் தோன்றி, இறுதியில் பல கலாச்சாரங்களில் பரவி, பல நூற்றாண்டுகளாக அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் மட்டுமின்றி சீரக நீரும் பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
சீரக நீரில் ஆரோக்கிய நன்மைகள் (Benefits of Coriander Water)
சீரகம் என்பது இந்திய சமையலறைகளில் காணப்படும் மிகவும் பொதுவான ஒரு மசாலா ஆகும். இது நமது உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்கிறது. ஆனால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பல அம்சங்கள் இந்தச் சிறிய விதைக்கு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக, எடை குறைப்பதிலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சீரக நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
சீரகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று செரிமானத்திற்கு (Home Remedy For Digestion) உதவுவது. பல நூற்றாண்டுகளாக, சீரக தண்ணீர் செரிமானப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜீரகத்தில் உள்ள தைமால் என்சைம்களைத் தூண்டும் ஒரு சேர்மமாகும். இது செரிமான சாறுகளை சிறப்பாக சுரக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது
சீரக விதையில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை (Home Remedy For Immunity) அதிகரிக்க உதவுகிறது. இது பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்று மற்றும் நோய்களைத் தடுக்கிறது. சீரக நீர் இரும்புச்சத்து மற்றும் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க சீரக நீரைக் குடிப்பது அவசியம். இது நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது
இரத்த சோகை என்பது கடுமையான இரும்புச்சத்து குறைபாட்டால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலையாகும். இரும்பு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். உடலின் சரியான செயல்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு இது அவசியமாகும். இரும்புச்சத்து குறைவாக இருப்பது ஆற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்குகிறது. சீரகத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகைக்கு (Home Remedy For Anemia) சிகிச்சையளிக்க உதவும்.
மேலும் படிக்க | சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய் வரை: பிரிஞ்சி இலையின் அட்டகாசமான நன்மைகள்
டிடாக்ஸுக்கு நல்லது
சீரக ஆல்டிஹைட், தைமால் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சீரகத்தின் கூறுகளாகும். இவை உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்கும் முகவர்களாக செயல்படுகின்றன. சீரக நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி பித்த உற்பத்தியை எளிதாக்குகிறது. எனவே, இது கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
சரும பாதுகாப்பு
சீரகத்தில் போதுமான அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்திற்கு உகந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களில் ஒன்றாகும். இது உங்கள் சருமத்தை தளர்வு இல்லாமலும் ஈரக்கும் வகையிலும் வைத்திருக்க உதவுகிறது. சீரக நீர் ஆரோக்கியமான, இளமையான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. தோல் அழற்சியை எதிர்த்துப் போராடவும் சீரகம் உதவுகிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாடு தோல் நோய்த்தொற்றைத் தடுக்க உதவுகிறது.
ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும்
சீரக விதைகள் சிறந்த இரத்தக் கொதிப்பு எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளன. இது உங்கள் சுவாசப்பாதை, நுரையீரல்கள், மூச்சுக்குழாய் ஆகியவற்றில் சளி திரட்சியை அழிக்க உதவுகிறது. நுரையீரல் புறணி வீக்கம் மற்றும் சளி உற்பத்தி அதிகரிப்பதால் ஆஸ்துமா ஏற்படுகிறது. இதன் விளைவாக சுவாச இயலாமை ஏற்படுகிறது. இந்த பாதையை சுத்தப்படுத்திய பிறகு, சீரகத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைத் தணித்து, சளி வராமல் தடுக்கும். ஆகையால் சீரக நீர் ஆஸ்துமா சிகிச்சைக்கும் (Home Remedy For Asthma) மிகவும் உதவியாக இருக்கும்.
வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
சீரக நீரில் ஏராளமான ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளன. அவை லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமலைத் தடுக்கும். ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் அல்லது சீரகம் கொண்ட ஒரு தக்காளி சூப், நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்த உண்மையாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கீல்வாதத்திற்கு நிவாரணம் அளிக்கும் டாப் 5 பழங்கள்: மூட்டு வலி தொல்லை இனி இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ