அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம்.  அதிலும், மிகச்சிறந்த பழங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  கொய்யா எளிதில் கிடைக்கக்கூடிய பழம் என்பதோடு,  எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொய்யாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான பழம். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தோடு, கண் பார்வை கூர்மையாக்கவும் உதவும். கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கொய்யா பழம் சாப்பிடுவது நல்லதாகும். அதோடு, நார்ச்சத்து மிக அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.


கொய்யாபழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


1. இனிப்பு சுவை இருந்தாலும் கொய்யா குறைந்த கிளைசமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.  இதனால் இரத்த சர்க்கரை அளவை  கட்டுப்படுத்தும். எனவே நீரிவு நோயாளுக்கு கொய்யாப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும். 


2. கொய்யாவில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழம். கொய்யாவில் நிறைந்துள்ள நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், அதிகமாக உணவு உட்கொள்வதை தவிர்க்கலாம். மேலும், கொய்யா உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரிக்க உதவுகிறது


3. மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான விட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6 கொய்யாவில் உள்ளது.  இதனால், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுவதோடு, நரம்புகளை தளர்த்தி மூளை சேர்வடையாமல் இருக்க உதவும்.


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!


4. வைட்டமின் ஏ  சத்து நிரைந்த கொய்யாப் பழம் கண் பார்வையை கூர்மையாக்குவதோடு, கண்புரை ஏற்படுவதையும் தடுக்கிறது. 


5. கொய்யாவில் நிறைந்துள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் ஃபிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எனவே சரும சுருக்கங்கள் நீங்கி இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. பொலிவான  தோற்றம் பெற கொய்யாப்பழம் அவசியம் இருக்கட்டும். 


6. கொய்யாவில் உள்ள விட்டமின் சி  நிறைந்துள்ளதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 


7. நார்சத்து நிறைந்த கொய்யாப்பழம் உடலிலுள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.  உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு குறைவதால் இதய நோய்கள் மாரடைப்பு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.


8. பைல்ஸ் என்னும் மூல நோயை குணப்படுத்த, மலச்சிக்கலை குணப்படுத்துவது அவசியம். எனவே, நார் சத்து நிறைந்த கொய்யா சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் மலச்சிக்கலுக்கான தீர்வு கிடைப்பதோடும் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ