சின்ன சின்ன விதைகளில் இருக்கும் பெரிய ஆரோக்கிய நன்மைகள்: தினமும் சாப்பிடால் திடமாய் இருக்கலாம்

Health Tips: விதைகளை உட்கொள்ளும்போது நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கக்கூடிய 5 விதைகளைப் பற்றி இங்கே காணலாம்.
Health Tips: நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க நாம் உணவு உட்கொள்கிறோம். ஆனால், உடலுக்கு உணவு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய மற்ற பொருட்களும் தேவை. இவற்றில் விதைகளுக்கும் முக்கிய பங்குள்ளது. அவற்றின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், அவற்றை சாப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை. இவற்றை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவற்றில் உள்ள புரதங்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவற்றில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
விதைகளை உட்கொள்ளும்போது நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கக்கூடிய 5 விதைகளைப் பற்றி இங்கே காணலாம்.
1. ஆளி விதைகள் (Flaxseeds)
ஆளிவிதையில் 110 கலோரிகள் உள்ளன. இதில் நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. தாதுக்களில் இரும்பு, தாமிரம், மெக்னீசியம் போன்றவை இதில் ஏராளமாகக் காணப்படுகின்றன. சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு ஆளி விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்கக்கூடிய சிறந்த மூலமாக உள்ளன. இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு இது முக்கியமானது. மேலும் இது தோல் மற்றும் கண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
2. சியா விதைகள் (Chia Seeds)
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இதன் இழைகள் மற்ற விதைகளைப் போல் கடினமாக இருக்காது. ஆகையால் அவற்றை ஒரு இரவு மட்டும் தண்ணீரில் ஊறவைத்தாலே போதும். இதில் 138 கலோரிகள் உள்ளன. இதை சாப்பிடுவதால், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களும் சுறுசுறுப்பாக மாறும். இதை உட்கொள்வதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், சாப்பிடும்போது நிறைவான உணர்வைத் தருகிறது. இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது, எனவே இது எலும்புகளுக்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்
3. பூசணி விதைகள் (Pumpkin Seeds)
பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கின்றன. இதில் 163 கலோரிகள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலையும் இவை குறைக்கின்றன. ஒரு நபரின் மனநிலையை கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இவை தவிர, பூசணி விதைகள் உட்புற வீக்கத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். இதை தொடர்ந்து சரியான அளவு உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும்.
4. எள் (Sesame Seeds)
எள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் 103 கலோரிகள் உள்ளன. இது கால்சியத்தின் நல்ல மூலமாகும். இதை சாப்பிடுவதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும். கால்சியம் இருப்பதால், இது எலும்புகளுக்கும் முக்கியமானது. எள் உட்கொள்வது புற்றுநோய் வராமல் காப்பதாகவும் கருதப்படுகிறது. இது சருமத்திற்கும் பயனூள்ளதாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்திற்கும் இது உதவுகிறது. கல்லீரலை வலுப்படுத்துவதுடன் எள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
5. சூரியகாந்தி விதைகள் (Sunflower Seeds)
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. கூடுதலாக, அவற்றில் ஆரோக்கியமான கொழுப்பும் உள்ளது. உடலில் வீக்கத்தை குறைக்க விரும்பினால், சூரியகாந்தி விதைகள் மிகவும் உதவியாக இருக்கும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது. இது புரதம், கால்சியம் மற்றும் பல வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இதில் 155 கலோரிகள் உள்ளன. இவை பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக கருதப்படுகின்றன. ஆகையால், இவை இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கல்லீரல் கச்சிதமாய் இருக்க இந்த பொருட்களை சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ