காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்

Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2024, 07:10 AM IST
  • ஓட்டப்பயிற்சிக்கு பின் இஷ்டத்திற்கு சாப்பிடுவது முழு பலனையும் தராது.
  • ஓட்டப்பயிற்சிக்கு பின் தண்ணீரை கடகடவென்று குடிக்கக் கூடாது.
  • இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ் title=

Foods After Morning Running Exercise: அதிகாலையில் எழுந்து ஓட்டப்பயிற்சியோ அல்லது நடைப்பயிற்சியோ மேற்கொள்வது மிக நல்லது. இது உங்களின் நாளை சிறப்பானதாக மாற்றும். அதிகாலையில் எழுந்திருப்பதே உங்களின் உடலுக்கு தனித்த ஆற்றலை வழங்கும். கூடவே நீங்கல் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் பிற உடற்பயிற்சிகளை காலையிலேயே மேற்கொள்வதன் மூலம் உடலும் மனமும் ஒருங்கே ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம். 

இருப்பினும் நமது மக்கள் ஒரு விஷயத்தை முறைப்படி செய்வதை உறுதிப்படுத்தவே மாட்டார்கள். உதாரணத்திற்கு அவர்களாகவே தங்களின் உடற்பயிற்சியையும், நடைப்பயிற்சியையும் திட்டமிட்டுக்கொள்வார்கள். இதில் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது என்பதை மறந்துவிடுவார்கள், அல்லது புறக்கணித்துவிடுவார்கள். இது பலருக்கு நீண்டகால பிரச்னையை ஏற்படுத்தலாம்.

அதேபோல்தான், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி முடித்து வந்து வயிறு நிறைய ஏதாவது ஒரு உணவுகளை உண்பது. இந்த பழக்கம் பலரிடமும் இருக்கும். ஆனால், அந்த பழக்கம் ஓட்டப்பயிற்சியின் மூலமோ நடைப்பயிற்சி மூலமோ அவர்களுக்கு கிடைக்கவேண்டிய முழு பலன்களை தடுக்கும் எனலாம். அதாவது ஒருவர் தனது உடற்பயிற்சிகளுக்கு தகுந்த பலன்களை பெற வேண்டும் என்றால், அவர் தனது பயிற்சிகளுக்கு பின் முறையான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க | தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

அந்த வகையில், நீங்கள் தினமும் காலையில் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களாக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். அதாவது, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சியை முடித்துவிட்டு சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு நாம் காணலாம்.

கார்போஹைட்ரேட்

நடைப்பயிற்சி முடித்து வந்ததும் கார்போஹைட்ரேட் நிறைந்த முழு தானியங்கள், தினை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடலாம். இது உங்கள் உடலின் கிளைகோஜனை நிரப்ப உதவும்

எலக்ட்ரோலைட்டுகள்

தேங்காய் தண்ணீர், ஸ்போர்ட்ஸ் டிரிங் மற்றும் வீட்டில் செய்யப்பட்ட எலக்ட்ரோலைட்டுகளை குடிப்பதன் மூலம் உடலின் எலக்ட்ரோலைட் அளவு உயரும். 

வைட்டமிண் சி தேவை

ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரீ போன்ற வைட்டமிண் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிடவும். இது உங்களின் திசுக்களை சரியாக்க உதவும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். 

புரதம்

உங்களின் தசைகளை சீராக்க புரதம் அதிகமுள்ள உணவுகளை எடுக்கவும். கிரீக் யோகர்ட், காட்டேஜ் சீஸ் உள்ளிட்டவைகளை சாப்பிடலாம்.

தண்ணீர்

நீண்ட தூரம் ஓட்டப்பயிற்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும். எனவே, மெதுவாக சீரான அளவில் தண்ணீரை அடிக்கடி குடிக்கவும்.

உடனடி புத்துணர்ச்சிக்கு...

ரன்னிங் முடித்து விரைவாகவும், ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சி பெற கீரைகள், புரோட்டீன் பவுடர்கள் ஆகியவை மூலம் ஸ்மூத்தி செய்து குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நோக்கத்தில் எழுதப்பட்டது. இவை அனைத்தும் பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் உங்களின் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இதற்கு Zee News பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | கல்லீரல் கச்சிதமாய் இருக்க இந்த பொருட்களை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News