Health Benefits of Soya Milk: சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன
தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ் , பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை சோயா பாலில் உள்ளது.
Health Benefits of Soya Milk in Tamil: சோயா பால் சிறந்த ஆற்றல் பெற உதவுகிறது. புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளன.
பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருப்பதால் அனைவரும் சோயா பாலை (Soya Milk) விரும்பி பயன்படுத்துகின்றனர். இது வெனிலா, சாக்லேட் என்று பலவிதமான பிளேவரில் கிடைக்கின்றன. உப்பு சுவையுடன் கூடிய சோயா பால் சீனா மற்றும் இந்தியாவில் விற்கப்படுகின்றன. பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை சாப்பிடாதவர்களுக்கு சோயா பால் ஒரு ஊட்டச்சத்தான மாற்று.
ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு
சோயா பாலின் ஊட்டச்சத்துகள்
* சோயா பால் சிறந்த ஆற்றல் பெற உதவுகிறது. புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ் , பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளன.
* வைட்டமின்களில் போலேட், தியாமின், ரிபோபிளவின், நியாசின், வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் கே , வைட்டமின் ஈ போன்றவை சோயா பாலில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் நிறைந்த சோயா பால் உடல் நலத்தை அதிகரிக்கிறது.
சோயா பாலின் ஆரோக்கிய பலன்களை பார்க்கலாம்.
1. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சோயா பாலில் உள்ள புரத சத்து மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரத சத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலக் கோளாறு ஏற்படும் போது அதனை சீரமைக்க பல நன்மைகளை செய்கின்றது . அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோபிளவோன்ஸ் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன . இது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது .டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.
ALSO READ | நீங்கள் குடிக்கும் பால் தூய்மையானதா? வெளியான அதிர்ச்சி தகவல்!
2. மெனோபாஸ் காலகட்டம்
மெனோபாஸுக்கு பிறகு பெண்களுக்கு , ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறைகிறது. அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை சோயா உணவுகளின் உட்கொள்ளல் தடுக்கிறது. சோயா உட்கொள்வதன் மூலம் எலும்பு பலத்தை அதிகரித்து எலும்பு முறிவு அபாயத்தை குறைக்க, சோயா பாலில் உள்ள , சோயா ஐசோபிளவோன்ஸ் உதவுகிறது.
3. புற்று நோயைத் தடுக்கிறது
சோயா பாலை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஆண்மை சுரப்பி புற்று நோய் தடுக்கப்படுகிறது. சோயா பாலை அதிகம் உட்கொள்ளும் ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மார்பக புற்று நோய் பெண்களை பரவலாக தாக்குகின்றது. மெனோபாஸ் கால கட்டத்திற்கு பிறகு, அதிகமான சோயா பாலை எடுத்து கொள்வதால், சோயா பால் ஈஸ்ட்ரோஜனுக்கு ஒரு மாற்றாக இருப்பதால் மார்பக புற்று நோய் தவிர்க்கப் படுகிறது.
4. உடல் பருமனை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலை குறைக்கிறது
சோயா உணவை எடுத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றத்தால் ஆண்களுக்கும், மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுகிறது. சோயாவில் உள்ள ஐசோபிளவோன்ஸ் கொழுப்பிணியாக்கத்தை தடை செய்து, கொழுப்பு திசுக்கள் வளர்ச்சியை குறைக்கிறது. ஆகவே சோயா பால் மற்றும் சோயா உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் கட்டுப்பட்டு, உடல் பருமன் சீராகி, சீரான இதய ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
ALSO READ | Health News: இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும், ஜாக்கிரதை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR