Side effects of Biscuits: சாக்லேட் உடல் நலத்திற்கு கேடு என்று நம்மில் அனைவருக்கும் தெரியும். ஆனால் பிஸ்கட் உடலுக்கு நல்லது என்ற எண்ணம் இன்னும் பலர் மத்தியில் உள்ளது. ஆனால் சாக்லேட்டை போலவே பிஸ்கட்டும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது பலருக்கு புரிவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிஸ்கட் சாப்பிட்ட சுமார் 250 குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பிஸ்கட் ஆரோக்கியமானதுதானா இல்லையா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. பள்ளியில் விநியோகிக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்ட உணவு குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு (Health Tips) ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


பிஸ்கட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து நிபுணர்கள் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.


ஊட்டச்சத்து குறைபாடு


பிஸ்கட்டை அளவிற்கு அதிகமாக குழந்தைகள் சாப்பிடுவதால், அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஏனெனில் பிஸ்கட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை மட்டுமே அதிக அளவில் உள்ளது. மேலும் பெரும்பாலான பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. எனவே, பிஸ்கெட்கள் அதிக அளவில் சாப்பிடுவதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து உடலில் கிடைக்காமல் போய்விடும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கும்.


குடல் ஆரோக்கிய பாதிப்பு 


பிஸ்கட்டில், நார்ச்சத்து என்பது முற்றிலும் கிடையாது. எனவே அளவுக்கு அதிகமாக பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சார்ந்த பிரச்சினைகளான வாயு பிரச்சனை, ஆசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை அளவோடு சாப்பிடுவது நல்லது.


மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்


பல் ஆரோக்கிய பாதிப்பு


பொதுவாக நாம் சாக்லேட் சாப்பிடுவது தான், பல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நினைப்போம். ஆனால் அளவுக்கு அதிகமான பிஸ்கெட்டும் பல்லா ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் அளவிற்கு அதிகமான சர்க்கரை காரணமாக பல் சொத்தை பிரச்சனை ஏற்படும். அதோடு அளவிற்கு அதிகமான சர்க்கரை, உடலில் இருக்கும் கால்சியம் சத்தை உறிஞ்சி, பற்களையும் எலும்புகளையும் பலவினப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


உடல் பருமன்


பிஸ்கட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை மட்டுமே அதிகம் உள்ளதால், அதில் கலோரிகளும் மிகவும் அதிகம். இதனால் குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் பருமன் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுவயதிலேயே பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக பிஸ்கட் கொடுக்க கூடாது என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்


பிஸ்கட் வகை உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை ஏதும் இல்லை. அதோடு குழந்தைகள் உணவில், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் பால், நட்ஸ் என்னும் உலர் பழங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சரிவிகித உணவுப் பொருட்களை சேர்ப்பது, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு உதவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ