Health News: மஞ்சள் என்பது இந்திய சமையலறைகளில் கண்டிப்பாக காணப்படும் ஒரு பொருளாகும். மஞ்சள் அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஆரோக்கியம் தொடர்பான பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் அதிக அளவில் பயனளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சளை காயங்களில் தடவினால், காயங்கள் விரைவாக குணமாகும். முழங்கால் வலிக்கான சிகிச்சை, இதய நோய் சிகிச்சை உட்பட பல சிகிச்சை முறைகளில் மஞ்சள் கணிசமாக பயன்படுத்தப் படுகின்றது. மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகின்றது.


ஆனால் மஞ்சள் (Turmeric) சில கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மஞ்சளை எப்போதும் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். அதிக அளவில் உட்கொள்ளாத வரை மஞ்சள் பொதுவாக முற்றிலும் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.


மஞ்சளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி காணலாம்:


கர்ப்பிணி பெண்கள் அதிகம் உட்கொள்ளக்கூடாது


மஞ்சள் சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் இதை குறைந்த அளவுகளிலேயே பயன்படுத்த வேண்டும். இதை அதிக அளவில் உட்கொள்வது மாதவிடாயை ஊக்குவிக்கும், கர்ப்பத்தில் (Pregnancy) ஆபத்துகளை உண்டுபண்ணும். மஞ்சள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் இதன் அளவில் கர்ப்பிணி பெண்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


ALSO READ: Shocking Health Facts: அளவுக்கு மிஞ்சினால் வேம்பும் விஷமே!!


இந்த பிரச்சனைகள் வரக்கூடும்


மஞ்சளை அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, அஜீரணம், மஞ்சள் மலம் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. மஞ்சள் ஒரு குறிப்பிடத்தக்க அளவு ஆக்சலேட்டைக் கொண்டுள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்வது பித்தப்பைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.


சிறுநீரக (Kidney) கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிக மஞ்சள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மஞ்சளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிகும். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து ஒரு மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.


இந்நாட்களில் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூளும் அதிகம் வருகின்றது. மஞ்சள் நிறத்தை அளிக்க இவற்றில் செயற்கை நிறங்களும் பயன்படுத்தப் படுகின்றன. ஆகையால் மஞ்சளின் தூய்மையைப் பற்றி நன்றாக அறிந்து பின்னர் வாங்குவது நல்லது.


குறிப்பு: இந்த செய்தி இந்த துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் உடல் நலன் ரீதியான எந்த வித ஆலோசனையையும் சிகிச்சையையும் செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் உங்கள் மருத்துவரை கண்டிப்பாக அணுக அறிவுறுத்தபடுகிறது.


ALSO READ: "ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக Cancerஐ தடுக்கும் மாயம் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR