தர்பூசணி விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்தா? ஆச்சரியம் தரும் பதில்!
Health Benefits Of Watermelon Seeds : தர்பூசணியில் இருக்கும் விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் என்ன நடக்கும்? பதிலை இங்கு பார்ப்போம்.
Health Benefits Of Watermelon Seeds : சம்மர் சீசன் தொடங்கி விட்டாலே அனைவரின் நினைவிற்கு வரும் பழங்களுள் ஒன்று, தர்பூசணி. வெயிலினால் உடல் சூடு அதிகரித்து, அந்த தாகத்தை தணிப்பதற்காகவும் சுவைக்காகவும் பலர் தர்பூசணியை சாப்பிடுவர். இதை பழமாக சாப்பிட்டாலும் சரி, ஜூஸாக குடித்தாலும் சரி அத்தனை சுவை, உடலுக்கு நன்மையும் கூட. “தர்பூசணி விதையை சாப்பிட்டாலை வயிற்றில் மரம் வளர்ந்து விடுமாம்டா..” என்பது, 90ஸ் குழந்தைகள் கிளப்பி விட்ட கதை என்றாலும், அதை கேட்கையில் வேடிக்கையாக இருக்கும். இதனாலேயே, பெரியவர்களான பிறகும் பலர் தர்பூசணி விதைகளை தெரியாமல் விழுங்கி விட்டு விழி பிதுங்கி நிற்பதுண்டு. நாம் நினைப்பது தர்பூசணி விதைகளாளல் வயிற்றில் மரம் எல்லாம் வளராது என்பது தெரியும். ஆனால், இதை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்குமா, தீமை பயக்குமா என்பது தெரியுமா?
தர்பூசணி விதைகளை சாப்பிடலாமா?
தர்பூசணி விதைகளில் பல கருப்பாகவும் சில வெள்ளை நிறத்திலும் இருக்கும். எந்த நிற தர்பூசணி விதைகளை சாப்பிட்டாலும் அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி விதைகளில் இருக்கும் வெள்ளை விதைகளுக்குள் ஒன்ருமே இருக்காது. அதனால் அதை தைரியமாக சாப்பிடலாம். கருப்பு நிறத்துடன் இருக்கும் தர்பூசணி விதைகளை சாப்பிடத்தான் பலர் தயங்குவர். இது குறித்து பேசும் மருத்துவர்கள், இவையும் சாப்பிடுவதற்கு மிகவும் பாதுகாப்பானவைதான் என்கின்றனர். இதனால் உடலில் நார்ச்சத்தும் அதிகரிக்குமாம்.
தர்பூசணி விதைகளால் ஏற்படும் நன்மைகள்:
>தர்பூசணி விதைகள் சிறிய அளவு இருந்தாலும், அதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
>தர்பூசணி விதைகளில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் விட்டமின் பி சத்தை உடலுக்கு வழங்கும் நைசின் சத்தும் இருக்கிறதாம்.
>சிலர், மோர் மற்றும் கோதுமையில் கூட தர்பூசணியை வெவ்வேறு வகைகளில் சேர்த்துக்கொண்டு தங்கள் டயட் உணவாக ஏற்றுக்கொள்கின்றனர்.
>ஒரு சிலருக்கு, எப்போதும் சாப்பிடும் உணவுகளில் இருந்து கொஞ்சம் மாற்றாக அதிக காரமாண உணவுகள் மற்றும் வெளி உணவுகளை உட்கொள்கையில் வயிறு உபாதைகள் ஏற்படும். அவர்கள், அதிகளவில் தர்பூசணி விதைகளை உட்கொண்டால் பிரச்சனை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால் இதை அதிகளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம்.
ஆபத்துகள் என்ன?
>அதிகளவில் தர்பூசணி விதைகளை எடுத்துக்கொண்டால் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கும், பிற வயிறு உபாதைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
>வறுத்த, வேகவைத்த மற்றும் முளை கட்டிய தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஹெல்தியான புரதச்சத்து கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! தர்பூசணியுடன் கூட்டணி சேராத ‘சில’ உணவுகள்!
தர்பூசணி விதைகளில் உள்ள புரத சத்துகள் என்ன?
>தர்பூசணி விதைகளில் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் புரத சத்துகள் உள்ளதாம். குறிப்பாக, உடலின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கு தேவைப்படும் மாக்னீசியம் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
>இதில் உள்ள லிகோபைன் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் சத்துகள், இதயத்திற்கு நன்மை பயக்கும் பலன்களை தரும் என மருத்துவ ஆய்வரிக்கைகள் தெரிவிக்கின்றன.
>புற்றுநோய் வரும் அபாயத்தில் இருந்து விடுபடவும், பிற இருதய நோய் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளவும் தர்பூசணி விதைகள் உதவுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தர்பூசணி விதைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
>தர்பூசணி விதைகளை விதவிதமாக, சுவையாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ரெசிப்பிகள் இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. தர்பூசணி கொட்டைகளை வறுத்து, அவற்றில் ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு, தயிர் கொஞ்சமாக சேர்த்து சாப்பிடலாம். இதனுடன் ஓட்ஸ் சேர்த்துக்கொண்டால் ஹெல்தி பிரேக்ஃபாஸ்டும் ரெடி.
மேலும் படிக்க | உடல் எடை சர்ரென இறங்க..‘இந்த’ நேரத்தில் உடற்பயிற்சி செய்து பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ