Olive Oil: புற்று நோய் முதல் அல்சைமர் வரை, பல நோய்களுக்கு கவசமாகும் ஆலிவ் ஆயில்!

ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால், புற்று நோய் முதல் அல்சைமர் வரை பல தீவிர நோய்களில் இருந்து தப்பிக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2022, 11:29 AM IST
  • ஆலிவ் எண்ணெயில் பாலிபினால்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவும்.
  • ஆலிவ் எண்ணெய் புற்று நோய் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
Olive Oil: புற்று நோய் முதல் அல்சைமர் வரை, பல நோய்களுக்கு கவசமாகும் ஆலிவ் ஆயில்! title=

புதுடெல்லி: ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் பல நோய்களை தவிர்க்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் காணப்படுவதால் வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கும். மேலும் இதில் வைட்டமின்-ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்

ஆலிவ் எண்ணெயில் பாலிபினால்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம்.

ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன்  வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் பி-கரோட்டின் ஆகியவை ஆலிவ் எண்ணெயில் உள்ளன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இதனை தொடர்ந்து அருந்தி வருவதால், பல பருவகால நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கலாம்.

மூளையை சுறுசுறுப்பாக்கும்
ஆலிவ் எண்ணெய் நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுபாக்கவும் உதவும். இதில் உள்ள பாலிஃபீனால்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும்.

வலுவான எலும்புகள் 

ஆலிவ் எண்ணெயில் கால்சியம் தவிர, பல பண்புகள் ஆலிவ் எண்ணெயில் காணப்படுகின்றன, இது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையில் உங்களுக்கு நிவாரணம் தரும்.

ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!

தோல் மற்றும் கேசத்தை மிளிரச் செய்யும்

ஆக்ஸிஜனேற்ற மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் பண்புகள் ஆலிவ் எண்ணெயில் காணப்படுகின்றன. இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முகப்பரு மற்றும் வறட்சியை நீக்குகிறது. ஆலிவ் எண்ணெய் முகத்திற்கு மிக சிறந்ததாக கருதப்படுகிறது. மேக்கப்பை அகற்றுவதற்கு உங்களிடம் க்ளென்சர் இல்லையென்றால், ஆலிவ் எண்ணெயை க்ளென்சராகப் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயும் தலைமுடியையும் வலுவாக்குகிறது

மலச்சிக்கலை தீர்க்கும்

ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது இரைப்பை குடல் மற்றும் வயிறு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இதனை பயன்படுத்துவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News