Grey hair causes:  வயதானவுடன், முடி நரைப்பது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாற ஆரம்பிக்கும் போது பிரச்சனை ஏற்படுகிறது. சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. இளம் வயதில் நரை முடி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை அறிந்து கொண்டால், இளநரையை தடுக்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளம் வயதில் நரை முடி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:


1. வைட்டமின் B12 குறைபாடு
சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு ( White Hair) வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். இந்த வைட்டமின் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு, முடி வளர்ச்சி மற்றும் முடியின் நிறத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி-12 உடலுக்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, முடியின் கருமை நிறத்திற்கு காரணமான மெலனின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது.


2. புகைபிடித்தல்


சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கும் புகைபிடிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஏனெனில், புகைபிடிப்பதால், இரத்த தமனிகள் குறுகி, முடியின் வேர்களுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமல் போகிறது. சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.


ALSO READ |ஹேர் டை ஏதும் தேவையில்லை; நரை முடியை கருமையாக்கும் பிளாக் டீ..!!


3. மன அழுத்தம்


மன அழுத்தம் உடலை மட்டுமல்ல, முடியையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, தூக்கமின்மை, பதற்றம், பசியின்மை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


ALSO READ | உங்கள் அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற மிக எளிய வீட்டு வைத்தியம்..!!


எனவே  இள நரை பிரச்சனையில் இருந்து தப்பிக்க  கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:


வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகள், சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளுதல்


உடற்பயிற்சி செய்தல்


புகைபிடிப்பதை நிறுத்துதல்


யோகா பயிற்சி செய்தல்


மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருத்தல்


பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல்


ALSO READ | Natural Deodorant: அக்குள் வியர்வை நாற்றத்தை போக்கும் ‘3’ சிறந்த இயற்கை வழிகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR