Hair Care Tips: இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் முடி கொட்டுவது சகஜமானதாக உள்ளது. இந்த பிரச்சனை நாம் உண்ணும் உணவின் காரணமாக இன்னும் அதிகமாகிறது. மாசுபாடும் கூந்தல் உதிர்வதற்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.
நாம் நமது கூந்தலை சரியாக பராமரிக்கவில்லை என்றால், கூந்தல் உடைந்து விடும். இந்த பிரச்சனையை தவிர்க்க, பெரும்பாலான மக்கள் பல வகையான சிகிச்சைகளை நாடுகிறார்கள். அதில் பல மடங்கு பணம் செலவழிவதோடு மட்டுமல்லாமல், இதனால் பெரிய அளவில் நன்மைகளும் ஏற்படுவதில்லை.
முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபட சில ஆயுர்வேத (Ayurveda) வைத்தியங்களை நீங்கள் பின்பற்றலாம். இந்த முறைகள் மிகவும் எளிமையானவை. இவற்றுக்கு ஆகும் செலவு மிகவும் குறைவுதான். இவற்றைப் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்.
முடி உதிர்வது ஏன்?
மாசு, மன அழுத்தம் அல்லது மோசமான வாழ்க்கை முறை போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம். இது தவிர, நீண்டகால நோய், உடல் மற்றும் மன அழுத்தம், மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தும். அதே சமயம் பொடுகுத் தொல்லை காரணமாகவும் முடி உதிர்வது தொடங்குகிறது.
முடி உதிர்வதைத் தவிர்க்க, முடியை வலுப்படுத்த முக்கிய குறிப்புகள்
1. நெல்லிக்காய் உட்கொள்ளலாம்
முடி உதிர்தல் பிரச்சனையை போக்க மருந்துகளுக்கு பதிலாக நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் நாட்டின் பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, வெறும் வயிற்றில் பச்சை நெல்லிக்காயை சாப்பிடலாம் அல்லது நெல்லிக்காய் சாறு குடிக்கலாம். ஏனெனில், இது முடிக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது முடி வளர்ச்சி, வலிமை மற்றும் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது.
ALSO READ | தினமும் தலைமுடியை அலசுகிறீர்களா! அப்போ கண்டிப்பா இதை படிச்சி பாருங்க!
இந்த ஹேர் மாஸ்க்கை கூந்தலில் தடவவும்
கூந்தல் உதிர்தல் (Hair fall) பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தவும்.
- இந்த மாஸ்கை உருவாக்க, 100 கிராம் முல்தானி மிட்டியை எடுத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- பிறகு காலையில் பேஸ்ட் செய்து அதில் 10 கிராம் வெள்ளை சந்தனப் பொடியை கலந்து கொள்ளவும்.
- இப்போது இந்த பேஸ்ட்டில் 2 அல்லது 3 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
- பின் அதனை தலை மற்றும் கூந்தலில் தடவி இருபது நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். அதன் பிறகு நீங்கள் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
வேப்பிலை கூந்தல் மாஸ்கை பயன்படுத்தலாம்
- வேப்ப இலைகளின் ஹேர் மாஸ்க் முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கிறது.
- இதற்கு வேப்ப இலைகளை அரைத்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்யவும்.
- பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து, இந்த மாஸ்கை உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்.
- இருபது நிமிடங்களுக்குப் பிறகு இந்த மாஸ்கைக் கழுவவும்.
வெந்தய விதை ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்
- வெந்தய (Fenugreek) விதைகளைக் கொண்டு ஹேர் மாஸ்க் செய்தால் முடி உதிர்வது குறையும்.
- இது முடியின் வலிமையையும் வளர்ச்சியையும் வெகுவாக அதிகரிக்கும்.
- இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பிறகு காலையில் இதை அரைத்து பேஸ்ட் செய்யவும்.
- இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியில் தடவவும்.
- இருபது நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு முடியை அலசவும்.
எண்ணெய் மசாஜ் செய்யவும்
கூந்தல் உடைவதைத் தடுக்க எண்ணெய் மசாஜ் அவசியம் என்கின்றனர் கூந்தல் நிபுணர்கள். இதற்கு ப்ரிங்ராஜ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது கூந்தலின் வேர்களை பலப்படுத்துகிறது, அதனால் கூந்தல் உடைவது நின்றுவிடும்.
ALSO READ | WALNUT: காலையில் வெறும் வயிற்றில் 2 வாதுமைக் கொட்டை செய்யும் மாயங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR