Health Tips: தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்
பொதுவாக நன்மை பயக்கும் சில உணவு பொருட்களை, வேறு சில உணவு பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது, அவை உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கலாம்.
ஒருவரின் உடல்நலம் என்பது அவரது உணவைப் பொறுத்தது. புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. அதே போன்று, பொதுவாக நன்மை பயக்கும் சில உணவு பொருட்களை, வேறு சில உணவு பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது, அவை உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கலாம்.
அவை இரண்டும் தனித்தனியே நல்ல உணவுகள் என்றாலும், அவற்றை சேர்த்து சாப்பிடும் போது, அது ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும் அந்த வகையில் இன்று, தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத பொருட்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
தேநீர் அல்லது காபியுடன் ஒருபோது எடுத்துக் கொள்ளக் கூடாது
தேநீர், அதாவது டீ அல்லது காபியுடன் தேனை உட்கொண்டால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தேநீர் அல்லது காபியுடன் தேனை சாப்பிடுவது உடல் சூடு அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படவும் வழிவகுக்கும்
முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, தேன் சாப்பிடக் கூடாது
முள்ளங்கியுடன் கூட தேன் உட்கொள்ளக்கூடாது, ஏனென்றால் தேனையும் முள்ளங்கியும் ஒன்றாக உட்கொண்டால், உடலில் நச்சுகள் உருவாகின்றன. இந்த நச்சுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த இரண்டிற்கும் இடையில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
பாலுடன் தேன்
பாலும் தேனும் என்பது இணைபிரியாத சொற்கள் தான். ஆனால், இவற்றை சம அளவில் கலந்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ | உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமற்ற 5 உணவுகளின் பட்டியல்
உடல் சூட்டை கிளப்பும் உணவுகளுடன் தேனை சாப்பிடுவதை தவிர்க்கவும்
சூடை கிளப்பும் உணவுகளுடன் உட்கொண்டால், உங்களுக்கு வயிறு தொந்திரவு ஏற்படலாம். இது தவிர, உங்களுக்கு வேறு விதமான வயிற்று பிரச்சினைகளும் இருக்கலாம். எனவே, தேனை சூட்டை கிளப்பும் பொருட்களுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் ஊட்ட சத்து நிபுணர்கள் கூறியுள்ள கருத்துக்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய உடல் ஆரோக்கியம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.
ALSO READ | Chickoo Benefits: சப்போட்டா பழத்தின் நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR