சப்போட்டா என்பது ஒரு சுவையான வெப்பமண்டல பகுதியில் விளையும் ஒரு பழமாகும். இதற்கு மணில்காரா ஜபோடா (Manilkara Zapota) என்ற அறிவியல் பெயரும் உண்டி. இது மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுக்கு சொந்தமானது. சப்போட்டா பழம் சிக்கூ, சிகூ, லேமூட், சப்போடில்லா, சப்போடில்லா பிளம், நோஸ் பெர்ரி மற்றும் சப்போட்டி போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில், இது கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
சப்போட்டாவில் கலோரிகளில் அதிகமாக உள்ளது. நார்ச்சத்துள்ள ஒரு நல்ல ஆதாரமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, நியாசின், ஃபோலேட் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் கொண்டுள்ளது.
சப்போட்டாவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.
சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக சிக்கு என வட இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தும் சொல்லாகும்.
ALSO READ | Side Effects of Almond: இவர்கள் பாதாம் பருப்பை உட்கொள்ளக்கூடாது
சப்போட்டாவின் நலன்கள் பற்றிப் பார்ப்போம்:
குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
சப்போட்டாவில் உள்ள இயற்கை தாவர கலவை டானின்களில் பாலிபீனால் உள்ளது, இது குடலில் அமில சுரப்பை நடுநிலையாக்குகிறது. சக்திவாய்ந்த ஆன்டிபராசிடிக், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, எரிச்சலூட்டும் வயிற்றை வலி, இரைப்பை அழற்சி மற்றும் பிற குடல் கோளாறுகளுக்கு மருந்தாக மயன்படுகிறது. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்கவும் மற்றும் குடலின் தொற்றுநோயைக் குறைக்கிறது.
வலுவான எலும்புகள்
சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் தாதுக்கள் எலும்பை வலுப்படுத்த உதவுகின்றன. சிக்குவை தவறாமல் உட்கொள்வது எலும்புகளின் தரத்தை மேம்படுத்தும். உணவில் தாமிரம் இல்லாததால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும், சப்போட்டாவில் தாமிரம் இருப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது, தசை மற்றும் திசு வலிமையை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சப்போட்டாவில் ஏராளமான வைட்டமின்கள் சி, ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி தாக்குதல்களிலிருந்தும் உடலைக் காப்பாற்றுகிறது.
ALSO READ | பரங்கிக்காய் தானே என எண்ண வேண்டாம்; ஏராளமான நன்மைகள் அதில் உள்ளது
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சப்போட்டா மிகவும் பரிந்துரைக்கப்படும் பழமாகும். இது ஏராளமான பொட்டாசியத்துடன் ஏற்றப்படுவதால், இது சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
கண்களுக்கு நல்லது
சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது. அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட வேண்டும்.
புற்றுநோயைத் தடுக்கிறது
ஆக்ஸிஜனேற்றங்களால் செறிவூட்டப்பட்ட சப்போட்டா பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். வைட்டமின்கள் ஏ மற்றும் பி ஆகியவற்றின் நன்மை சளிப் புறணியை ஆரோக்கியமாக பராமரிப்பதில் உதவுகிறது. நுரையீரல் மற்றும் வாய்வழி புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
ALSO READ | Chicken Eating Tips: அதிக சிக்கன் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR