தயிரில் பல விதமான சத்துக்களும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை உணவில் அதிகம் பயன்படுத்தினர்.அதுவும் தென்னிந்திய உணவில் தவிர்க்க முடியாத உணவு என்றல் அது தயிர் சாதம் தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயிரின் அற்புதமான மருத்துவ குணங்கள்


1.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தயிர் சிறந்த புரோபயாடோடிக் உணவுகளில் ஒன்றாகும், இதில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் உள்ளன. புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராட காரணமான இரத்ததில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுகிறது. 


2. பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த, தயிர் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது கீல்வாதத்தைத் தடுக்கிறது


3. மிருதுவான சருமம் மற்றும் மின்னும் தலைமுடியைப் பெற வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தலாம்


தயிர் சருமத்திற்கும் தலைமுடிக்கும் அழகூட்ட  மருந்து பொருளை போல் பயன்படுத்தலாம். தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். தயிர் ப்ளீச்சாக செயல்படுகிறது. ஆரோக்கியமான, பளபளப்பான முடியைப் பெற இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.


4. செரிமானத்தை மேம்படுத்துகிறது


தயிரில் உள்ள புரோபயாடிக் தன்மை செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. தயிர் ஜீரணிக்க எளிதானது.  பால் தயிராக உறையும் போது அதில் உள்ள லாக்டோஸ் உடைக்கப்படுவதால் லாக்டோஸ் அலர்ஜி அல்லது பாதிப்பு ஏற்படுபவர்களும் தயிரை  உட்கொள்ளலாம்.


ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

5. இதயத்திற்கு நல்லது
தினமும் தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனால், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.


6. எடையை குறைக்க உதவுகிறது
கார்டிசோல் எனப்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு சேர்கிறது. தயிர் கார்டிசோல் உற்பத்தியை குறைப்பதால், நீண்ட காலமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. 


7. பொடுகு நீக்குகிறது
தலை முடியின் பொதுவான பிரச்சனையான பொடுகு பிரச்சனைக்கு தயிர் சிறந்த வீட்டு வைத்தியம். தயிரின் ஆண்டி ஃபங்கல் தன்மை பொடுகு நீக்குவதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது. தயிர் மற்றும் மருதாணி கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ பொடுகு நீங்கும்


8. யோனி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆரோக்கியமான யோனிக்கு தயிரில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியா பெரிதும் உதவுகிறது. இது யோனி pH அளவை சமன் செய்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 


9. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது


தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை கலந்த தயிர் உணவை தவிர்ப்பது நல்லது.


10.  ஆற்றலை கொடுக்கும் உணவு
நீங்கள் சோர்வாக இருந்தால், உடனடியாக தயிர் எடுத்துக் கொள்ளவும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, தயிர் ஒரு ஆற்றல் ஊக்கியாகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது கடின உழைப்பிற்கு பிறகு ஏற்படும் சோர்வை விரைவாக போக்க உதவுகிறது. 


இத்தனை பலன்கள் நிறைந்த தயிரை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.


ALSO READ | தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR