தென்னிந்திய உணவுகளில் பருப்பு இல்லாத உணவே கிடையாது எனலாம். வட இந்திய உணவிலும் பருப்பு மிகவும் முக்கிய அம்சம். நம்மில் பலருக்கு, இரவில் சப்பாத்தி மற்றும் தால் (பருப்பு)  எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பருப்பு வகைகளில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன என்பதற்கு மாற்று கருத்து ஏதும் இல்லை. இதனுடன், பருப்பு வகைகளில் புரதத்தின் அளவும் அதிகம் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் மதிய உணவு மற்றும் இரவு உணவில் பருப்பு வகைகளை உட்கொள்கிறார்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவை சாப்பிட நினைக்கும் பலர் இரவில் பருப்பு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். ஆனால் இரவு உணவில் பருப்பு உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகின்றானர். 

எப்போதும் இரவில் எளிதில் செரிமானம் ஆகும் உணவை உண்ண வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். இரவில் அதிகமாக சாப்பிடுவது வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறைவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஆனால் இரவில் பருப்பை  உட்கொள்வது அஜீரணத்தை ஏற்படுத்தும்.பருப்பு வகைகள், குறிப்பாக, துவரம் பருப்பு, ராஜ்மா, கொத்துக்கடலை, பட்டாணி  போன்ற பருப்பு வகைகளை இரவு நேரங்களில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த பருப்பு வகைகளை உட்கொள்வது செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


ALSO READ | Health Tip: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா?


பகலில் பருப்பு வகை உணவுகளை  உட்கொள்வது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. நமது உணவு பகலில் நன்றாக ஜீரணமாகும். நீங்கள் இரவில் பருப்பு வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், படுக்கைக்கு செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் பருப்பு  வகைகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதனால் பாதிப்பு மிக குறைவாக இருக்கும்.


ALSO READ | என்ன செஞ்சாலும் எடை குறையலையா... 7 நாளில் எடையை குறைக்க Military Diet ட்ரை பண்ணுங்க..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR