டிபன் ஃபுல்லா காலியாகிவிடும்... குழந்தைகளுக்கான சில சுவையான ஆரோக்கியமான ரெஸிபிகள்
குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே மாதிரியான உணவு செய்து தராமல் கொஞ்சம் மாறுதலாக, சுவையாக உணவுகளை தயார் செய்து கொடுப்பதால், அவர்கள் ஆர்வமாக, மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதற்கு உதவும் வகையில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மதிய உணவு ரெஸிபிகள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே மாதிரியான உணவு செய்து தராமல் கொஞ்சம் மாறுதலாக, சுவையாக உணவுகளை தயார் செய்து கொடுப்பதால், அவர்கள் ஆர்வமாக, மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதற்கு உதவும் வகையில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மதிய உணவு ரெஸிபிகள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.
சில சத்தான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள், ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவியாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான மதிய உணவிற்கு இந்த சுவையான உணவுகளை கொடுப்பது, சிறந்த தேர்வாக இருக்கும்.
பன்னீர் புர்ஜி, ஓமம் சேர்த்த பரோட்டா மற்றும் சாலட்
பன்னீரில் புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும் எலும்புகளை வலுப்படுத்தவும் (Bone Health) உதவுகிறது. பன்னீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள உயர்தர புரதம் சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. பன்னீர் புர்ஜி செய்வதும் மிக எளிது, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்ஹ்த்டு வதக்கி பன்னீரை அதில் சேர்க்க வேண்டும். குறைந்த நெய் கொண்டு செய்யப்பட்ட ஓமம் பரோட்டா மற்றும் சாலட் ஆகியவற்றுடன் பன்னீர் புர்ஜியை மதிய உணவிற்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
காய்கறி சேர்த்த ஊத்தப்பம்
குழந்தைகளுக்கான மதிய உணவில், காய்கறி சேர்த்த ஊத்தப்பம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இதில் அரசியின் அளவைக் குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக சிறுதானியங்களை சேர்த்து செய்யும் போது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு பல மடங்கு அதிகரிக்கிறது, இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி1 மற்றும் சி தவிர மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை ஏராளமாக உள்ளன. கேரட், கோஸ், தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சேர்த்து ஊத்தப்பம் செய்வது சிறந்த உணவாக இருக்கும். நெய் அல்லது நல்லெண்ணெயில் ஊத்தப்பம் செய்யவும். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி நல்ல தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க | Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்
கேரட் சாதத்துடன் வெள்ளரிக்காய்
கேரட் சாதம் தயாரிக்க, நல்லெண்ணெய் அல்லது நெய்யைப் பயன்படுத்தவும், முடிந்தவரை பிற காய்கறிகளைச் சேர்க்கவும், இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய உடலுக்கு உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் வானிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. அதனுடன் வெள்ளரிக்காய் பச்சடியை சேர்த்துக் கொள்ளலாம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
குயினோவா உப்புமா அல்லது பொங்கல், தயிர் மற்றும் மக்கானா
அரிசி பொங்கல் அல்லது உப்புமா செய்வது போல் குயினோவா உப்புமா அல்லது பொங்கல் நல்ல தேர்வாக இருக்கும். ஃபைபர் மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்து கூறுகள் குயினோவாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன. குறைந்த எண்ணெய் மற்றும் அதிக காய்கறிகளுடன் இதை தயாரிக்கவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் மற்றும் மக்கானாவுடன் இதை கொடுத்து அனுப்பலாம். மக்கானா எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
குழந்தைகளுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை கொடுப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது உடல் பருமன் பல நோய்களை கொண்டு வருகிறது. குழந்தைகள் இதனால் அவர்கள் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, கடுமையான நோய்களுக்கு பலியாகலாம்.
மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... முளை கட்டிய வெந்தயத்தை அடிக்கடி சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ