தொற்றுநோய்களின் போது உணவு விஷயத்தில் கவனமாக இருங்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பால் சுவை மற்றும் பசி உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதுமே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் விற்பனை சூடுபிடித்தன.


ஆனால், உண்மையிலேயே ஒமிக்ரான் போன்ற விரைவில் பரவும் வைரஸ் மாறுபாட்டில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும் சில உணவுகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டால், ஒமிக்ரானை ஓட ஓட விரட்டலாம்.


உணவுப் பொருட்களின் கலவையானது வைட்டமின்கள், தாதுக்கள், நல்ல தரமான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உங்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கும். இந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.


ALSO READ | ஆரோக்கியமா? அழகா? இரண்டையும் கொடுக்கும் எளிய உணவு


இருப்பினும், ஒமிக்ரானின் அறிகுறிகளை சுலபமாக போக்க உதவும் சில உணவுகள் உள்ளன. சூப்கள், மசாலா கலவைகள் கொண்ட சூடான பானங்கள் தொண்டை புண்ணை அதிகரித்துவிடும். 


உணவை விழுங்குவது கடினமாக இருக்கும்போது கிச்சடி அல்லது கஞ்சி போன்ற மென்மையான அல்லது உணவுகளை சாப்பிட வேண்டும்.வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் போன்ற பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். 


புரதங்கள் நிரம்பிய முட்டை, தயிர், பால், சோயாமில்க், பனீர், கோழி, மீன், பருப்பு வகைகள் மற்றும் முழு பருப்பு வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளவும். வைட்டமின் சி நிரம்பிய நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிடவும்.


ALSO READ | சுவையானதெல்லாம் ஆரோக்கியமானதா? இனிக்கும் சர்க்கரையின் கசப்பான மறுபக்கம்


கொண்டைக்கடலை, முந்திரி, முட்டை, கீரை, பருப்பு, பால் என துத்தநாக சத்துள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும். அதேபோல, அக்ரூட் பருப்புகள், மீன், ஆளிவிதை, கொட்டைகள் உட்பட ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடவும். 


ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கும். பருவகால மற்றும் வெவ்வேறு நிறங்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் இருக்கின்றன.


சரியான ஆரோக்கியமான உணவு இதுதான் என்று யாராலும் அறுதியிட்டு உறுதியாக சொல்லிவிட முடியாது. பாதிப்பு மற்றும் இணை நோய்களின் அடிப்படையில் உட்கொள்ளும் உணவும் மாறுபடும். 


எனவே, கோவிட்-19 சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது நோயில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஆரோக்கியமான சத்தான உணவைத் திட்டமிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்தாலோசியுங்கள்.


ALSO READ | பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு! இது ஊட்டச்சத்து மந்திரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR