மனநிலையை மேம்படுத்துவதற்கு நாம் உட்கொள் உணவுகளும் பெரிய காரணமாக இருக்கலாம் என்ற மருத்துவர் தெரிவிக்கின்றன. எனவே, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெர்ரி பழங்கள்:


வெள்ளி பழங்களில் ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது குடல் அழற்சி, வயிறு அழுத்தம், வயிறு உப்பசம் ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது. இதனை தயிர் அல்லது பழசாறுடன் சேர்த்து சாப்பிடலாம். 


டார்க் சாக்லேட்: 


மனநிலையை மேம்படுத்தும் கேஃபைன், ப்ளேவனயிடுஸ் உள்ளிட்ட பிளேவர்கள் இதில் நிறைந்து இருக்கின்றன. இதை சாப்பிட்ட உடன் ரத்த ஓட்டம் மூளைக்கு அதிகமாக செல்வதால் மனநிலை மகிழ்ச்சியாக மாறுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். 


ஃபேட்டி மீன்கள்:


இந்த வகை மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. இவை மூளை நன்றாக செயல்பட உதவும் முத்துக்களைக் கொண்ட உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களையும் இது கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். 


நட்ஸ்: 


சில ஆரோக்கியமான பழ விதைகளில் ஒமேகா திரைய அமிலங்கள், மக்னீசியம் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை மூளை சரியாக செயல்படுவதற்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளிப்படுத்துவதற்கும் காரணமாக இருக்கின்றன. எனவே உடல் ஆற்றலை அதிகரிக்கவும் மூளை ஆற்றலை அதிகரிக்கவும் நட்ஸ்களை சாப்பிடலாம்.‌


வாழைப்பழம்: 


வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, இயற்கை சர்க்கரை ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இது மூளை ஆற்றலை அதிகரிக்கும் ஹார்மோனை பூஸ்ட் செய்து மகிழ்ச்சி ஹார்மோனையும் தூண்டிவிடும். இதை காலை உணவு அல்லது ஸ்மூதி சேர்த்து சாப்பிடலாம்.


சிட்ரஸ் பழங்கள்:


சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை மன அழுத்தத்தை குறைக்கவும் மகிழ்ச்சி ஆரம்பமானங்களை தூண்டவும் உதவுகின்றன. கிரேப் ஃபுரூட், ஆரஞ்சு ஆகியவற்றை ஆரோக்கிய ஸ்னாக்ஸ் போல சாப்பிடலாம். 


பச்சை உணவுகள்: 


பச்சை உணவுகள் என்றால் வேகவைக்காத உணவுகள் அல்ல பச்சை நிற உணவுகள் ஆகும். இவற்றில் வைட்டமின் பி சத்துக்கள் இருப்பதால் அவை உடலில் சரோடோனின் அளவை அதிகரிக்கின்றன. இது நம் மனநிலை மேம்பட உதவுகிறது. பச்சை காய்கறிகளை வைத்து சாலட் அல்லது ஸ்மூதியாக செய்து சாப்பிடலாம். இதனை சாப்பாட்டிற்கு பொருளாகவும் செய்து சாப்பிடுவது நன்று.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)