பழச்சாறுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிகவும் ஆரோக்கியமானவை. பல நோய்களைத் தடுக்க உதவும் இந்த ஆரோக்கியமான பழச்சாறுகளை தினமும் குடித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் அழற்சி போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பழச்சாறுகளை தினசரி குடித்துவந்தால் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக வாழலாம்.


ஆரோக்கியத்திற்கான பழச்சாறுகள்
ஒரு கிளாஸ் புதிதாக பிழிந்த சாற்றை அனுபவித்துக் குடித்தால் ஆரோக்கியம் (Healthy fruit juice) உங்களை நேசிக்கும். பதப்படுத்தப்பட்ட பழச்சாற்றைவிட புதிய சாறு குடிப்பது எப்போதும் புத்துணர்ச்சியைத் தரும்.


இந்த சாறுகள் சுவையானது மட்டுமல்ல, தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. புதிய பழச்சாறுகளை குடிக்க ஆரம்பித்தவுடன் உங்கள் ஆரோக்கியம் மற்றும் சருமத்தில் ஒரு வித்தியாசத்தை கண்கூடாக காணலாம்.



பழமா இல்லை பழச்சாறா? 
பலர் தங்கள் இயற்கையான நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதில்லை. அதோடு, அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சாத்தியமில்லை.


இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊட்டச்சத்து உட்கொள்வதை அதிகரிக்கவும், பலவிதமான முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெறவும் ஒரு வசதியான வழியாக பழச்சாறு இருக்கிறது.


பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜூஸ் செய்யும் போது நார்ச்சத்து குறைந்துவிடுவதாக கூறப்பட்டாலும், அதிலுள்ள நன்மைகள் ஓரளவேனும் கிடைத்து விடுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான விரைவான மற்றும் எளிதான வழி ஜூஸ் என்பதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. 


மேலும் படிக்க | 10 நிமிடங்களில் ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் அற்புத ஜூஸ்


ஆஸ்துமாவிற்கு உகந்த பழச்சாறுகள்
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தொடர்பான பல சந்தேகங்கள் இருக்கும். வைட்டமின்கள் ஏ மற்றும் டி நிறைந்த உணவை உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது.


தினசரி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெற, கேரட், செலரி, அன்னாசி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து ஆரோக்கியமான பழச்சாறு தயாரித்து குடிக்கலாம்.
 
நீரிழிவு நோய்
பழரசத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, உடலுக்கு தினசரி தேவைப்படும் அளவு ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக காய்கறிகளை உட்கொள்வதை எளிதாக்குகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எந்த வகையான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாவுச்சத்து இல்லாத மற்றும் குறைந்த கார்ப் காய்கறிகள் மற்றும் நீரிழிவு நோய்க்கு உகந்த பழங்களில் கவனம் செலுத்தினால், ஜூஸ் குடிப்பது பாதுகாப்பானதாக இருக்கும். கேரட், கீரை மற்றும் செலரி ஆகியவற்றின் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது இளைஞர்கள் மற்றும் வயதானவர்களிடையே அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக வறுத்த மற்றும் பொறித்த உணவுகளையும், கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 


கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த நன்கு சமநிலையான உணவை உண்ண வேண்டும். இவர்களின் உணவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் இருக்க வேண்டும். எனவே, புதிய மற்றும் ஆரோக்கியமான பழச்சாறுகளைக் குடிப்பது நன்மை பயக்கும். பீட்ரூட், செலரி, கீரை மற்றும் இஞ்சி ஆகியவற்றை அடிக்கடி பழச்சாறாக தயாரித்துக் குடிக்கலாம்.  


எக்ஸிமா
அரிக்கும் தோல் பிரச்சனைகள் என்றுமே கொடுமையானது. அரிப்பு, வீக்கம், எக்ஸிமா பிரச்சனை உள்ளவர்கள், பழ ஜூஸ் குடிப்பது நல்லது. கீரை,  மற்றும் செர்ரி போன்ற போதுமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழச்சாறுகளை எக்ஸிமா பாதிப்பு உள்ளவர்கள் அருந்துவது நல்லது.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR