இளைஞர்களை குறி வைக்கும் `ஹார்ட் அட்டாக்`... இந்த 10 விஷயங்களில் கவனம் தேவை
Heart Attack: மாரடைப்பு மிகவும் குறைவான வயதுடையவர்களுக்கு மிக அதிகமாக வருகிறது. மாரடைப்பு ஏற்படும் வயதின் வரம்பு ஒப்பீடளவில் மிகவும் குறைந்துள்ளது.
சமீப காலங்களில் மக்களை ஒரு அச்சம் வெகுவாக ஆட்கொண்டுள்ளது. மாரடைப்பின் அச்சம்தான் அது!! முன்ன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது. இதை பற்றிய செய்திகளை நாம் தினம் தினம் கேள்விப்படுகிறோம். அதுவும் மாரடைப்பு மிகவும் குறைவான வயதுடையவர்களுக்கு மிக அதிகமாக வருகிறது. மாரடைப்பு ஏற்படும் வயதின் வரம்பு ஒப்பீடளவில் மிகவும் குறைந்துள்ளது.
பொதுவாக 40 வயது நிரம்பியவர் இளம் வயதினர் அல்லது நடுத்தர வயதினராகக் (Middel Age) கருதப்படுகிறார். ஒருவர் 60 வயதை அடையும் போது தான் முதியவராகிறார். ஆனால் சமீபகாலமாக 60 வயதில் வரும் நோய்கள் தற்போது 40 வயதிலேயே வரும் அளவிற்கு நமது வாழ்க்கை முறை மாறிவிட்டது. குறிப்பாக மாரடைப்பு போன்ற கொடிய பிரச்சனையைப் பற்றி பேசினால், சில தசாப்தங்களுக்கு முன்பு வரை இது வயதானவர்களின் நோயாக கருதப்பட்டது. ஆனால் சமீப வருடங்களில் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுளை நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். இதயம் தொடர்பான நோய்கள் காரணமாக இளம் வயதிலேயே பலர் இறக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையாக உள்ளது. 40 வயதுக்குட்பட்டவர்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 20 வயத ஆண்கள் மற்றும் 30 வயது பெண்களும் மாரடைப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் ஐரோப்பியர்களை விட சராசரியாக 10 ஆண்டுகள் முன்னதாக மாரடைப்பு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த இடைவெளி அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், மற்ற நாடுகளின் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை பின்பற்றும் போக்கு அதிகரித்து உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்து உணவுப்பழக்கமும், பிற பழக்கங்களும் இருக்க வேண்டும் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். வாழ்க்கை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை அதிகரித்து, இளைஞர்களிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நமது ஆரோக்கியத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படாமல், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 60 -களில் வரும் நோய்கள் 40 -களில் வருவது ஒரு கசப்பான உண்மை. இது தனிநபருக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் ஆபத்தானது.
மேலும் படிக்க | Disease X நோய் தொடர்பாக மீண்டும் எச்சரிக்கைகள் எழுவது ஏன்? கொரோனா மீண்டு எழுகிறதா?
40 வயதில், 60 -களில் வரும் நோயைத் தவிர்க்க சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கலாம். சிறு வயதில் பல பெரிய நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவக்கூடிய சில முக்கிய உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.
- எதைச் சாப்பிட்டாலும், உங்கள் கலோரியில் ஒரு கண் தேவை, அதை கட்டுக்குள் வைத்திருங்கள்.
- உடல் செயல்பாடுகள் அவசியம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை ஆபத்தானது.
- பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்
- உங்கள் உணவில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
- உணவில் ஆரோக்கியமான புரதத்தைச் சேர்க்கவும், அது தாவர அடிப்படையிலான அல்லது கடல் உணவாக இருக்க வேண்டும்
- நான் ட்ராபிக்கல் திரவ எண்ணெயைப் பயன்படுத்தவும்
- பதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து விலகி இருங்கள்
- உங்கள் உணவில் இருந்து செயற்கை சர்க்கரையை அகற்றவும்
- உப்பு உட்கொள்ளலை குறைக்கவும்
- மது அருந்துவதை கட்டுப்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் அளவை கட்டுப்படுத்த.. இந்த ஜூசை 1 வாரம் குடிங்க போதும், உடனே கண்ட்ரோல் ஆகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ