சுகர் அளவை கட்டுப்படுத்த.. இந்த ஜூசை 1 வாரம் குடிங்க போதும், உடனே கண்ட்ரோல் ஆகும்

Bitter Gourd To Control Blood Sugar: சர்க்கரை நோயை ஒழிக்க கடப்பான பாகற்காயை சாப்பிட வேண்டாம். மாறாக சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 26, 2023, 04:54 PM IST
  • பாகற்காய் கசப்பாக இருப்பதால், இதை உட்கொள்வதை பலர் தவிர்க்கிறனர்.
  • இதனால் பல முக்கிய ஊட்டச்சத்துக்களையும் இழக்கின்றனர்.
  • பாகற்காயின் கசப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் கசப்பு இல்லாமல் சுவையான பாகற்காய் சாற்றை செய்து பாருங்கள்.
சுகர் அளவை கட்டுப்படுத்த.. இந்த  ஜூசை 1 வாரம் குடிங்க போதும், உடனே கண்ட்ரோல் ஆகும் title=

சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தான நோயாகும். இதை மருந்துகளால் முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். இவர்கள் உணவில் பல விஷயங்களை தவிர்க்கவும் வேண்டும். எந்தெந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அதிகரிக்கும், எதைச் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை சர்க்கரை நோயாளிகள் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். 

இரத்த சர்க்கரை அளவை குறைக்க பாகற்காய்

இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான நோய் ஆகிவிட்டது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, நாம் பல கசப்பான பொருட்களை உட்கொள்கிறோம், அதில் பாகற்காயும் ஒன்று. சிலருக்கு கசப்பான பாகற்காய் பிடிக்காது, ஆனால் தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேறு வழி இல்லாமல், வலுக்கட்டாயமாக இதை உட்கொக்கிறார்கள். வைட்டமின் சி, துத்தநாகம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பாகற்காயில் உள்ளன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், உடல் பருமன், தைராய்டு போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்கும். 

பாகற்காய் கசப்பாக இருப்பதால், இதை உட்கொள்வதை பலர் தவிர்க்கிறனர். இதனால் பல முக்கிய ஊட்டச்சத்துக்களையும் இழக்கின்றனர். பாகற்காயின் கசப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் கசப்பு இல்லாமல் சுவையான பாகற்காய் சாற்றை செய்து பாருங்கள். ஆம், இப்போது சர்க்கரை நோயை ஒழிக்க கசப்பான பாகற்காயை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது, மாறாக சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பாகற்காயை எப்படி சுவையாக உட்கொள்வது என இந்த பதிவில் காணலாம். 

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்படி பாகற்காயை உட்கொள்வது? 

முதலில் பாகற்காயை நன்றாகக் கழுவி நடுவில் வெட்டி விதைகளை எடுக்கவும். பாகற்காயின் தோல் உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அதன் தோலை அகற்ற வேண்டாம். இப்போது விதை எடுக்கப்பட்ட பாகற்காயை ஒரு மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும். இப்போது அதனுடன் எலுமிச்சை சாறு, சிறிது கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

பாகற்காய் சாறு தயாரிக்கப்பட்டதும், வடிகட்டியின் உதவியுடன் நன்கு இதை வடிகட்டவும். இந்த சாற்றில் பாகற்காய் விதைகள் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு கலந்து சாப்பிடலாம். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். இந்த ஜூஸில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அதில் சிறிது அளவு கூட கசப்பு தெரியாது. மேலும் இரத்த சர்க்கரையையும் இதன் மூலம் அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் படிக்க | சுகர் லெவல் எகிறாமல் இருக்க... ‘இந்த’ தவறுகளை ஒரு போதும் செய்யாதீங்க!

இந்த ஜூஸை குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள்

- இந்த சாற்றை உட்கொள்வதால் உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். 

- இந்த சாறு உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

- இதில் எலுமிச்சை சாறு உள்ளது, இது வைட்டமின் சியின் நல்ல மூலமாகும். அத்தகைய சூழ்நிலையில், இதை உட்கொள்வதால் உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

- இந்த சாற்றை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம், உங்கள் உடல் எடையை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தட்டையான வயிறு, நச்சுனு இடுப்பு, ஒல்லியான உடம்பு வேண்டுமா... இந்த ஜூஸ் குடிங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News