ஆரோக்கியமான இதயத்திற்கான உணவு: இதயம் நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். நமக்கு வயதாகும்போது, ​​நமது உறுப்புகள் காலப்போக்கில் தேய்மானம் அடைகின்றன. உறுப்புகள் பலவீனமடைவதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது என்றாலும், அவ்வாறு சீக்கிரம் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக , நாம் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் முதுமையை நிச்சயம் தள்ளிப் போடலாம். சூப்பர் உணவுகள் சிறந்த ஊட்டச்சத்து மிக்கவையாக இருப்பதால், நம் உடலுக்கு பெரும் நன்மைகளைத் தருகின்றன. சூப்பர்ஃபுட்கள் சிறந்த இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். 40 வயதிற்குப் பிறகு இதய நோய் வராமல் இருக்க இளம் வயதிலேயே அவற்றைச் சாப்பிடத் தொடங்குங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதய ஆரோக்கியத்திற்கு இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்


1. முழு தானியங்கள்


சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைப் போலல்லாமல், முழு தானியங்கள் நம் உடலுக்கும், குறிப்பாக இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதே வேளையில், முழு தானியங்கள் இதயத்தை வழக்கமான தேய்மானத்திலிருந்து பாதுகாக்கின்றன.


மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க


2. டார்க் சாக்லேட்


நீங்கள் சாதாரண சாக்லேட் அதிகம் சாப்பிட்டிருக்க வேண்டும், ஆனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இனிமேல் டார்க் சாக்லேட் சாப்பிடத் தொடங்குங்கள்.  ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தடர்க் சாக்லேட்டை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உடலும் இதயமும் நம்மைச் சுற்றியுள்ள நச்சுப் பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. டார்க் சாக்லேட்டில் இதய செயல்பாட்டை மேம்படுத்தும் முக்கியமான தாதுக்கள் உள்ளன.


3. கொழுப்பு நிறைந்த மீன்


சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பின் வளமான ஆதாரங்கள். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புரதம் தேவைப்படுகிறது. இதனுடன், ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடல் சரியாக செயல்படவும், அத்தியாவசிய வைட்டமின்களை உறிஞ்சவும் உதவுகின்றன.


4. ஆலிவ் எண்ணெய்


ஆலிவ் எண்ணெய்  நம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மற்ற சமையல் எண்ணெய்கள் இதய நோயை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். ஆனால்,  ஆலிவ் எண்ணெய் அதைக் குறைக்க உதவும். தினசரி உணவில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துபவர்களுக்கு இதய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ