மாரடைப்பைத் தவிர்க்க வேண்டுமா; முருங்கை இலைகளை கட்டாயம் டயட்டில் சேர்க்கவும்
Heart Health: தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால், இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெரிதும் அதிகரித்து வருகிறது.
தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால், இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. உண்மையில், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம். முருங்கை இலைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைப்பதால், மாரடைப்பு அபாயம் பெருமளவு குறைகிறது.
தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் முருங்கை இலைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத்தை பிட் ஆக வைத்திருக்கும்.
மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க
மேலும், முருங்கை இலை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக்கும்.
மேலும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடல் பருமன் இதய நோய் மட்டுமல்ல பல்வேறு நோய்களுக்கான முக்கிய காரணமாக உள்ளது அத்தகைய சூழ்நிலையில், முருங்கை சாறு மிகவும் பயனளிக்கும். இது உடல் எடையைக் குறைப்பதோடு, கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் தினமும் அதன் சாற்றை உட்கொள்வதுடன். கூட்டு அல்லது பொரியல் வடிவில் உணவில் சேர்த்துக் கொண்டால், பல நன்மைகளைத் தரும்.
நமது உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். மேலும், மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும், கொழுப்பு நிறைந்த உணவுகளை விட்டு விலகி இருந்தல் இயதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR