மாரடைப்பு அபாயம் நீங்க... கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்...
Best Fruits to Reduce High Cholesterol: துரித கதியில் இயங்கும் இந்த உலகில் நாம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று இதய நோய். இதனால் மாரடைப்பு சம்பவங்கள் பெருகிவிட்டன.
இன்றைய வாழ்க்கை முறை கொடுத்த பரிசுகளில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். துரித கதியில் இயங்கும் இந்த உலகில் நாம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று இதய நோய். இப்பொழுதெல்லாம் கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது முதியவர்களை விட இளையவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. இதனால் மாரடைப்பு சம்பவங்கள் பெருகிவிட்டன.
அன்றாடம் நாம் செய்திகளில், இளம் வயதினர் மாரடைப்பு மற்றும் இதய நோய் காரணமாக இறப்பதை பற்றி கேள்விப்படுகிறோம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் உணவு முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த பழங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உளவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய, பழங்களைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். இதய ஆரோக்கியத்திற்காக, நாம் அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் இங்கே குறிப்பிட்டுள்ள பழத்தை சேர்த்துக் கொள்வதால், ஆரோக்கியமாக வாழலாம். கொலஸ்ட்ரால் (Cholesterol Control Tips) காரணமாக ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயங்களையும் தவிர்க்கலாம்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் பழங்கள்
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்து, ரத்த சோகையை நீக்கும் ஆற்றல் கொண்ட பேரீச்சம்பழம் கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. எனவே உணவில் பேரிச்சம் பழத்தை கட்டாயம் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
மாதுளை
இரும்பு சத்து நிறந்த மாதுளை, இதய தமனிகளிலும், நரம்புகளிலும் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை எரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மாதுளை சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அளவு அதிகரிப்பதோடு ஹீமோக்ளோபின் அளவும் அதிகரிக்கின்றன. காலையில் மாதுளை எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
ஆப்பிள்
ஆப்பிள் பழம் அனைவருக்கும் பிடித்த பழம். ஆங்கிலத்தில் தினமும் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொள்வதால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்ற பொருள்படும், An apple a day keeps the doctor away என்னும் பழமொழி மிகவும் பிரசித்தம். ஆப்பிள் பயோ ஆக்டிவ் பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இவை இதய தமனிகளில் சேரும் கொட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் செரிமானத்தை மேம்படுத்துவது உடல் எடையை குறைப்பது என பல்வேறு வகையில் ஆப்பிள் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ
ஆப்ரிகாட்
பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதிசய சத்துக்கள் நிறைந்த ஆப்பிரிக்கா பழங்கள், தமிழில் சர்க்கரை பாதாமி என்றும் அழைக்கப்படுகிறது. பொன்னிறமான மேல் தோல், புளிப்பு சுவை கொண்ட இந்த ஆப்பிரிக்காட் பழம் கொலஸ்ட்ராலை எரிப்பதோடு மட்டுமின்றி, பித்தப்பையில் சேரும் கற்களை போக்கவும், குடல் புழுக்களை அளிக்கும் ஆற்றலையும் கொண்டது. இதில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3 வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன.
வெண்ணெய் பழம் என்னும் அவகெடோ
வெண்ணெய் பழத்தில் ஆரோக்கிய கொழுப்புகளோடு, பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ