மாரடைப்பு அண்டாமல் இருக்க.... நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்..!!
இதய ஆரோக்கியம்: கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை உண்டாக்கும். எனவே அதைக் குறைக்க நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். கொலஸ்ட்ரால் என்பது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL கொலஸ்ட்ரால் மற்றும் அழுக்கு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகளாகும். கெட்ட கொலஸ்ட்ரால் தான் உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது. ஏனெனில் இது உங்கள் இரத்த நாளங்களில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்றுகிறது.மேலும், இதில் உள்ள மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. நன்மையையே ஏற்படுத்தும். HDL கொலஸ்ட்ரால் உடல் செல்களை உருவாக்க வேலை செய்கிறது. இது அழுக்கு கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்புவதன் மூலம் அதனை கரைத்து உடலை விட்டு வெளியேறுகிறது.
கெட்ட கொழுப்பு நரம்புகளிலும் இதய தமனிகளிலும் அடைப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது இரத்த ஓட்டத்தை நிறுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா, உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
கெட்ட கொலஸ்ட்ராலுக்கு எதிரியாகும் உணவுகள்
சியா விதைகள்
சியா விதைகள் தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். உங்கள் உணவில் சியா விதைகளைச் சேர்ப்பது LDL அதாவது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், HDL என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும். அதுமட்டுமின்றி, மேலும் உயர் ரத்த அழுத்தம் குறைந்து கட்டுக்குள் இருக்கவும் உதவுகிறது.
பார்லி
முழு தானியமான பார்லி, பீட்டா-குளுக்கனின் சிறந்த மூலமாகும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து HDL ஐ அதிகரிக்கவும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.
வாதுமை பருப்பு
அக்ரூட் என்னும் வாதுமை பருப்பில் முக்கியமாக ஒமேகா-3 கொழுப்பு உள்ளது. இது ஒரு வகை மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். இது இதயத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இரத்த கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் HDL அதாவது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் அதன் நுகர்வு இதயத்தற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் அதிகரிக்காது.
சோயாபீன்
இறைச்சிக்கு ஒரு சிறந்த சைவ மாற்று, சோயாபீன்ஸ் நிறைவுறா கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தவிர, இதில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் HDL அளவை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் LDL அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ