நமது உடலின் மிகப்பெரிய உறுப்பும், உடலில் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரியாக விளங்கும் கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகின்றன. கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம்தான், கல்லீரல் அழற்சி.  சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கான மூல காரணங்களாக உள்ளன. ஹெபடைடிஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது மற்றும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக WHO புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WHO என்னும் உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒருவர் ஹெபடைடிஸ் நோயால் இறக்கிறார் என கூறுகிறது. ஹெபடைடிஸ் என்பது 5 விகாரங்களைக் கொண்ட ஒரு வைரஸ் ஆகும். A, B, C, D மற்றும் E. இவற்றில், உலகில் உள்ள பெரும்பாலான கல்லீரல் நோய்த் தொற்றுகள் B மற்றும் C ஆகியவற்றால் ஏற்படுகின்றன. 


கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள் 


காய்ச்சல், அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, உடல் சோர்வு, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), ரத்த வாந்தி ஆகியவை கல்லீரல் அழற்சியை உணர்த்தும் ஆபத்தான அறிகுறிகள். அதோடு, கல்லீரல் வேலை செய்யாமல் போனால், உடலிலுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கால், கைகளில் நீர் சேர்ந்து வீக்கம் ஏற்படும். ஹெபடைடிஸ் B, C வைரஸ் பாதிப்பால் லிவர் சிரோஸீஸ் என்னும் கல்லீரல் சுருக்கமும் ஏற்படும். சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டால், அதை குணப்படுத்துவது கஷ்டம் என்கின்றனர் மருத்துவர்கள்.


ஹெபடைடிஸ் வைரஸ் தொற்றை தவிர்க்க மேற்கொள்ள வேண்டியவை


கல்லீரால் ஆரோக்கியத்தை காக்க, வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும், காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்கவும், முடிந்தவரை சமைத்த காய்கறிகளை சாப்பிடவும், இந்த தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மது, போதை பொருட்கள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | உருளைக் கிழங்கு சாப்பிட்டு உடல் எடையை குறைப்பது எப்படி?


ஹெபடைடிஸ் பி வைரஸ் பிரசவத்தின் போது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.  பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம் அல்லது பிற உடல் திரவங்களுடன் தொடர்புகொள்ளும் நிலையில் அல்லது பாதிக்கப்பட்ட துணையுடன் உடலுறவின் போதும் பாதுகாப்பற்ற ஊசி மூலமும் ஹெபடைடிஸ் பி வைரஸ் பரவுகிறது. பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்களை தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.


ஹெபடைடிஸ் தொற்று அறிகுறி இருந்தால் ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி உள்ளதா எனப் பரிசோதிக்க மருத்துவரிடம் சென்று ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். A க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. உணவு கட்டுபாட்டின் மூலம் கல்லீரல் தன்னை தானாகவே சரி செய்து கொள்ளும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டையும் ஆன்டிவைரல் மருந்துகளால் குணப்படுத்த முடியும். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி ஆகியவற்றைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.இதன் கல்லீரல் சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை தடுக்கலாம் 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | தோல் அரிப்பு உங்களை பாடாய்படுத்துகிறதா? எளிமையான நிவாரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ